உச்சத்தில் தக்காளி விலை.. உடனே தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு.. இனி பிரச்சினை இருக்காது! சூப்பர்
சிவகங்கை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தக்காளி விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பொதுவாகவே பருவமழை காலத்தில் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் பனி அதிகம் இருக்கும் போது உற்பத்தி பாதிக்கப்படுவதால் இதே தான் நடக்கும்.

இந்தாண்டும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை மளமளவென அதிகரித்து வருகிறது. தக்காளி என்பது சமையலுக்கு தேவையான முக்கியமான விஷயம். தக்காளி விலை இந்தளவுக்குத் தாறுமாறாக உயர்ந்துள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி விலை: சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேநேரம் இப்போது கோயம்பேடு சந்தையிலேயே விலை உயர்ந்து ரூ.50ஐ தாண்டி விற்பனையாகிறது. அதேநேரம் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை ரூ.80 வரை விற்பனையாகிறது.
என்ன காரணம்: ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையே இதற்குக் காரணமாகும். கனமழையால் விளைச்சல் குறைந்து, தக்காளி வரத்து குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாக அமைச்சர் அமைச்சர் பெரியகருப்பன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தினமும் தக்காளி சட்னி சாப்டுற நான் எங்க.. மீந்து போன தேங்காய் சட்னி சாப்டுற நீ எங்க!
அமைச்சர் தகவல்: சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. அதைக் கட்டுக்குள் வைத்திருக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பசுமை பண்ணை மூலம் தக்காளி விற்பனை செய்து சென்னையில் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறோம். பிற மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை காரணமாக மழைக் காலத்தில் ஆண்டுதோறும் இந்த ஓரிரு மாதங்கள் தக்காளி விலை அதிகரிப்பது வழக்கம் தான். கடந்தாண்டு கூட தக்காளி விலை அதிகரித்தே இருந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பண்ணை பசுமை கடைகள் மூலம், ரேஷன் கடைகள் மூலம் தக்காளி குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதன் மூலம் விலையேற்றம் கட்டுக்குள் வைக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்: மேலும், கூட்டுறவுச் சங்க தேர்தல் குறித்த கேள்விக்கு, "கூட்டுறவுச் சங்க தேர்தலைத் தமிழ்நாடு அரசால் நேரடியாக நடத்த முடியாது. தேர்தல் ஆணையம் தான் இந்த தேர்தலை நடத்த வேண்டும். தமிழக அரசு அதற்கு ஒத்துழைப்பு மட்டுமே தர முடியும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications