சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆட்டுக்கு தாடி".. அங்கே கேட்டுச்சா.. இங்கே "திராவிடம்"தானாம்.. ஹைலைட்டே வேற.. அதிமுக "தலை" ஒரே போடு

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின் ஜெயக்குமார் பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் தமிழகத்தில் நடந்துள்ள, 2 முக்கிய நிகழ்வுகள் குறித்து, மூத்த தலைவரும், மாஜி அமைச்சருமான ஜெயக்குமார் சில கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அது அரசியல் களத்தில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.

2 அரசியல் நிகழ்வுகளை இங்கே நாம் குறிப்பிட வேண்டி உள்ளது.. முதலாவதாக, தமிழக ஆளுநர் ரவியின் பேச்சுக்கள் சமீபகாலமாக சர்ச்சைகளாக அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.. சமீபத்தில்கூட திராவிடம் இனம் என ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் கூறியது சொன்னது, திராவிடம் என்பது ஒரு இனமே இல்லை என்று கூறியிருந்தார்.

வட பகுதியில் இருப்பவர்கள் தெற்கு பகுதிக்கு வருவதும், தெற்கில் இருப்பவர்கள் வட பகுதிகளுக்கு செல்வதும் நீண்டகாலமாக இருந்து வருகிறது, அதுமாதிரி ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகும், திராவிட இனம் என்று பின்பற்றுவது தவறு என்றும் ஆளுநர் பேசியிருந்தது, திராவிட தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டுபண்ணி வருகிறது.

ஓபிஎஸ் கதை முடிஞ்சுது.. இவரு மட்டும் ஜெயிப்பாராம்; மத்தவங்க வெற்றியை கெடுப்பாராம்! சீறிய ஜெயக்குமார்ஓபிஎஸ் கதை முடிஞ்சுது.. இவரு மட்டும் ஜெயிப்பாராம்; மத்தவங்க வெற்றியை கெடுப்பாராம்! சீறிய ஜெயக்குமார்

 ஆடு தாடி

ஆடு தாடி

இரண்டாவதாக, 4 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து, திமுக அரசு மீதான புகார்களை தந்திருந்தார்.. இந்நிலையில், இவ்விரு நிகழ்வுகள் குறித்தும், மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் நம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக முன்வைத்தோம்.. ஆளுநர் திராவிட இனம் என்று ஒரு இனமே இல்லை என்கிறாரே, அண்ணாயிஸ்ட்டாக ஜெயக்குமார் இதை எப்படி பார்க்கிறார்? என்று கேள்வி கேட்டோம்.. அதுமட்டுமல்ல, ஆளும் தரப்பு மீது புகார்கள் இருந்தால், கோர்ட்டுக்கு போகாமல், ஆளுநரை எதற்காக சென்று சந்தித்து முறையிட வேண்டும்? ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று அண்ணா வழிவந்த அதிமுக, இப்படி ஆளுநரிடமே புகாரை தரலாமா? என்றும் நாம் ஜெயக்குமாரிடம் கேட்டோம்.

 ஆட்டுக்கு தாடி

ஆட்டுக்கு தாடி

அதற்கு ஜெயக்குமார் சொன்ன பதில்கள்தான் இவை: "ஆளுநரை பொறுத்தவரை, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும்.. அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை.. அதைத்தாண்டி, "திராவிடம்" என்று சொன்னால், எங்கள் கட்சியே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தானே.. எங்கள் கட்சியிலேயே திராவிடம் பெயர் உள்ளதே.. இங்கு எல்லாமே திராவிட கட்சிகள்தான்.. இந்த திராவிடம் பற்றி, அறிஞர் அண்ணா எழுதிய புத்தகம் முதல் பெரியார் எழுதிய புத்தகங்கள்வரை நான் ஆளுநருக்கு கொடுக்க தயாராக இருக்கிறேன்..

திராவிடர்

திராவிடர்

கருத்து சுதந்திரம் என்பது எல்லாருக்கும் உள்ளது.. அதேசமயம், அந்த கருத்தை மறுத்து பேசும் சுதந்திரமும் நமக்கு உள்ளது.. திக-வில் இருந்து திமுகவாகவும், பிறகு அதிமுகவாகவும் உருவானது.. அப்படி இருக்கும்போது, திராவிட இனம் இல்லை என்று ஆளுநர் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? அதனால், ஆளுநர் ரவி அவர்கள், நிறைய படிக்கணும்.. நீங்களும், நானும் திராவிடர்தான்.. எப்படி திராவிட இனம் இல்லாமல் போகும்? அவர் கருத்தை ஏற்க முடியாது.. அண்ணா எழுதிய புத்தகம், பெரியார் எழுதிய புத்தகங்களை, ஆளுநர் நிறைய படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

 காலாவதியாயிடுச்சே

காலாவதியாயிடுச்சே

ஆன்லைன் ரம்மியை பொறுத்தவரை, அது நிச்சயம் தடை செய்ய வேண்டியதுதான்.. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலும், இதற்கான ஒரு மசோதாவை கொண்டு வந்து, சட்டமியற்றப்பட்டது.. அதை அடிப்படையாக வைத்துதான் திமுகவும் மசோதா நிறைவேற்றியுள்ளது.. சில கேள்விகளையும் திமுக அரசு கேட்டிருக்காங்க.. அந்த கேள்விகளுக்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும்... அது காலாவதியாகிவிட்டது என்கிறார்கள்.. இருந்தாலும், புதிதாக ஒரு மசோதாவை திமுக தரப்பு, இயற்றியும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.. அப்படி அனுப்பும்போது ஆளுநர் அதற்கு கண்டிப்பாக ஒத்துழைப்பு தர வேண்டும், தருவார் என்றே நம்புறோம்.. நாங்களும் இதுகுறித்து பற்றி வலியுறுத்துவோம்..

டெண்டர்

டெண்டர்

ஆளுநரை பொறுத்தவரை, அவர்தான் நிர்வாகத்தின் தலைவர்.. அதனால்தான் அவரிடம் நாங்கள் புகார்களை தர வேண்டியுள்ளது. அவர் நடவடிக்கை எடுக்கவில்லையானால்தானே, கோர்ட்டுக்கு நாங்கள் போக முடியும்? நிர்வாக தலைவர் என்ற அடிப்படையில் ஆளுநர், புகார்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பலாம்.. அதனால்தான், இருக்கும் அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி கொள்கிறோம்.. இதில் தவறு எதுவும் இல்லை.. ஒரு டெண்டர் வந்தால்கூட, அது ஆளுநர் பெயரில்தான் வரும்.. நிர்வாகத் தலைவர் என்ற முறையில்தான் புகார்களை தந்தோம்.

 7.5%

7.5%

அதேசமயம், ஆட்சியில் இருக்கும்போதுதான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.. எங்கள் ஆட்சி காலத்திலேயே, 7.5 சதவீதம் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அப்போதைய ஆளுநர் ஒப்புதல் தரவில்லையே.. கடைசியில் நாங்களே அதை அமலாக்கிவிட்டோமே.. இன்னைக்கு அரசு பள்ளியில் படிக்கும் எத்தனையோ ஏழை, எளிய மாணவர்கள், அந்த 7.5 சதவீதத்தை அனுபவிக்கிறார்கள்தானே.. இதுதான் எங்கள் தனித்தன்மை.. திமுகவுக்கு இல்லாத தைரியம் எங்களுக்கு உள்ளது" என்றார்.

English summary
Top 2 major issues in tamilnadu and aiadmk jayakumar says about bjp, Governor RN Ravi: Specials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X