சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சங்கி" பழனிசாமி.. ஆஹா 4 பேர்.. ஒரே குட்டைதான்.. சிங்கிளாகவே "சிக்ஸர்" அடிக்கும் திமுக: சிவ ஜெயராஜ்

ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது ஏன் என்று திமுக-வின் சிவ ஜெயராஜ் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை குறை சொல்ல எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவை மண்ணோடு மண்ணாக்குவோம் என்று சொல்லி வந்த ராஜாஜி முதல் பலருக்கு என்ன நடந்தது என்பது, அரசியல் படித்தோருக்கு நன்றாக தெரியும்.. அந்த 4 பேரின் குரலும், திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் என்றால், அவர்களுக்கும் இதே கதைதான் என்று, திமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜ் காட்டமாக கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

ஆளும் திமுகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலையும் அப்போது வாசித்திருக்கிறார்.

ஓஹ்ஹோ.. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க காரணமே வேறயாமே.. இது பாஜகவுக்கு தெரியுமா?.. திணறும் யூகம்ஓஹ்ஹோ.. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க காரணமே வேறயாமே.. இது பாஜகவுக்கு தெரியுமா?.. திணறும் யூகம்

 சிவ ஜெயராஜ்

சிவ ஜெயராஜ்

அரசியல்ரீதியாகவும் இந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. இந்நிலையில், திமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜ் நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. எடப்பாடி பழனிசாமி எதற்காக ஆளுநரை சந்தித்து பேசியிருப்பார் என்ற கேள்வியை, அவரிடம் நாம் முன்வைத்தோம்.. அதற்கு சிவ ஜெயராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டு கருத்துக்கள்தான் இவை:

 ஆளுநர் சந்திப்பு

ஆளுநர் சந்திப்பு

"திருச்சி சூர்யா பேசிய மிகச்சிறந்த உரையாடலை நாம் அனைவரும் கேட்டோம்.. அண்ணாமலையின் தூண்டுதலோடுதான் சூர்யா இப்படி பேசியுள்ளதாக நான் நினைக்கிறேன்.. இந்த திருச்சி சிவா ஆடியோ விவகாரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது, செய்தியாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அண்ணாமலை கேட்டுக்கொண்டதன் பேரில், எடப்பாடி போய் ஆளுநரை சந்தித்ததாக எனக்கு தகவல் வந்தது.. அதாவது பாஜகவின் உண்மையான தலைவர் எடப்பாடியா? அண்ணாமலையா? என்பதுதான் எனக்கு சந்தேகமே..

 வீராங்கனை

வீராங்கனை

அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னைத்தானே நியமித்துக் கொண்ட எடப்பாடியால், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.. அதனால் பாஜகவின் தலைவராகவாவது செயல்படுவோமே என்று நினைக்கிறாரோ என்ற ஐயம்தான் ஏற்படுகிறது.. ஏனென்றால், அண்ணாமலை, எடப்பாடி இவர்களின் குரலும் ஒரே மாதிரியாக இருக்கிறது.. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு வந்தபோது, அது சமூக நீதிக்கு எதிராக உள்ளதால், அனைவருமே எதிர்த்தோம்.. ஆனால், சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் பெற்ற ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுகவின், இன்றைய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி, அதை ஆதரிக்கிறாரே?

 நேருக்கு நேர்

நேருக்கு நேர்

அப்படியென்றால், பாஜகவின் குரல்தானே எடப்பாடி பழனிசாமியின் குரலும்? சமூக நீதிக்கு எதிரான குரல்தானே அது? எடப்பாடி பழனிசாமி என்பவர் அதிமுகவின் தலைவரா? பாஜகவின் தலைவரா? ஓபிஎஸ்ஸுக்கும், எடப்பாடிக்கும் எப்படி அதிமுகவில் ஒரு போட்டி உள்ளதோ, அதுபோல பாஜக தலைவர் அண்ணாமலையா? எடப்பாடியா? என்ற போட்டி உள்ளது.. எதிர்க்கட்சி தலைவர் அண்ணாமலையா? எடப்பாடியா? என்ற போட்டி உள்ளது..

 சிங்கம் சிங்கிள்

சிங்கம் சிங்கிள்

இரட்டை இலை முடக்கக்கூடாது, ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதற்காகவும் ஆளுநரை சென்று சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.. அந்த கட்சி தனக்குதான் என்று எடப்பாடியும் சொல்கிறார், ஓபிஎஸ்ஸும் சொல்கிறார், சசிகலாவும் சொல்கிறார், அதிமுகவின் ஜெராக்ஸ்ஸாக டிடிவியும் உள்ளார்.. இப்படி கோளாறுகளை இவர்கள் வைத்துக் கொண்டு, திமுகவை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இந்த 4 பேரின் குரலும், திமுகவை எதிர்ப்பது மட்டும்தான்.. திமுகவை மண்ணோடு மண்ணாக்குவோம் என்று சொல்லி வந்த ராஜாஜி முதல் பலருக்கு என்ன நடந்தது என்பது, அரசியல் படித்தோருக்கு நன்றாக தெரியும்..

 குட்டையில் ஊறிய மட்டை

குட்டையில் ஊறிய மட்டை

அந்த கதைதான் இந்த 4 பேருக்கும்.. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் இவர்கள்.. இவர்கள் கும்பலாக வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி, சிங்கம் சிங்கிளாக வரும், திமுக சிங்கம் இவர்களை வீழ்த்தும்.. ஏற்கனவே நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில்களில் இவர்களை வீழ்த்தியாயிற்று, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வீழ்த்துவோம்.. ஆளுநரை கண்டிக்க வேண்டிய இடத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கே பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் என்றால், இவரும் பாஜகதானே? அதிமுகவின் பழனிசாமி, சங்கி பழனிசாமியாகவே மாறிவிட்டார்" என்றார்.

English summary
Top 3 reasons and why did edapadi palanisamy meet the governor, says DMK Siva Jeyaraj: Specials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X