மோடி டூ ஆர்.என் ரவி.. "அவாள்".. பாவம் அண்ணாமலை.. ஒரே பேச்சில் ஆ. ராசா தந்த டாப் பதிலடிகள்.. விளாசல்!
சென்னை: இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆ. ராசா சமீபத்தில் பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் அப்படி பேசியது ஏன் என்று ஆ. ராசா அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள், மனுதர்மத்தில் இருக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் பேசி இருந்தார். ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.
இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

ஆ. ராசா பேச்சு
இந்த நிலையில் தான் அப்படி பேசியது ஏன் என்று ஆ. ராசா அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஆ. ராசா தனது பேச்சில், மன்னிப்பு கேட்க கூடாது என்றெல்லாம் இல்லை. தவறு செய்தவன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காத ஆள் அயோக்கியன். மாண்பு உள்ளவன் மன்னிப்பு கேட்பான். நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லடா லூசு.. நான் என்ன தவறாக பேசினேன். திருப்பதி நாராயணன் போன்றவர்கள் நல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மதத்தில் வேறுபாடுகள் இல்லை என்று சொல்கிறார்.

வேறுபாடுகள் பழசு
இந்து மதத்தில் இருந்த வேறுபாடுகள் எல்லாம் பழசு. இப்போது அரசியலமைப்பு சட்டம்தான் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். அவர் வைக்கும் வாதம் நியாயமாக தோன்றலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி பதவி ஏற்றாரே ஆளுநர் ஆர். என் ரவி, அவர் ஏன் சனாதனம் பற்றி பேச வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி பதவி ஏற்றுக்கொண்டு சானதானம் பற்றி ஏன் பேச வேண்டும். அரசியலமைப்பு சட்டம் இருக்கும் போது அவர் ஏன் சானதானம் பற்றி எப்படி பேச முடியும்.

மனுதர்மம் இல்லை
அரசியலமைப்பு சட்டம் வந்த பின் மனு தர்மம் இல்லை என்று திருப்பதி நாராயணன் சொன்னாரே.. அப்போது ஆர். என் ரவி பேசியது என்ன? இதற்கு பதில் சொல். அப்போது இந்துக்கள் இரண்டு வகை. சானதானம் பேசும் இந்துக்கள். அரசியலமைப்பு சட்டம் பேசும் இந்துக்கள். சானதானம் பேசும் இந்து ஆர். என் ரவி.. சானதானம் பேசும் இந்து சங்கராச்சாரி.. சானதானம் பேசும் இந்து அவாள். சானதானம் பேசும் இந்துக்களுக்கு வெளியே இருப்பவர்கள் அவாள் இல்லை.

சானதானம்
சானதானம் பேசும் இந்துக்களுக்கு வெளியே இருப்பவர்கள் பாவம் அண்ணாமலை.. பாவம் வானதி சீனிவாசன்.. பாவம் எடப்பாடி பழனிசாமி.. பாவம் ஓ பன்னீர்செல்வம். பாவம்.. எல்லோரும் பாவம். அரசியலமைப்பு சட்டப்படி பதவி ஏற்ற ஆளுநர், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் சனாதனம் பற்றி பேசுவது சரியா? சனாதனம் தவறு இருக்கிறதே.. அது தெரிந்து தானே அவர் பேசினார்? என் கையில் மனுதர்மம் இருக்கிறது. இந்து பனாரஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகம் என் கையில் உள்ளது.

கவர்னர் என்ன சொல்கிறார்?
சானதானம் இல்லை, அரசியலமைப்பு சட்டம்தான் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி ஏற்ற ஆளுநர் பிறகு எப்படி சானதானம் பற்றி பேச முடியும். சானதானத்தின் முதல் வரியிலேயே, வேதத்தின் அடிப்படையில் வந்த புத்தகம் இது. இது ஆரிய மத புத்தகம் என்கிறது. ஆனால் நாங்கள் திராவிடர்கள். நாங்கள் திராவிட மாடல். இது ஆரிய மதத்தால் கொண்டு வரப்பட்ட மதம். அவர்களுக்குத்தான் அந்த சானதானம் தர்மம் என்று சொல்கிறார்கள். எங்களுக்கும், அதற்கும் என்ன சம்பந்தம், என்று ஆ. ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications