கன்னியாகுமரி சுற்றுலா போறீங்களா.. திருவள்ளுவர் சிலைக்கு போக முடியாது! எத்தனை மாதம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான திருவள்ளுவர் சிலையை மக்கள் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய சுற்று மையங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்குள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்க்க ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் அங்குத் திரள்வது வழக்கம்.
குமரியில் திருவள்ளுவருக்கு வானை முட்டும் அளவுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை
இந்த சிலையைக் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருங்கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, 7 ஆயிரம் டன் எடை கொண்டதாகும். 2004இல் ஏற்பட்ட சுனாமி சமயத்தில்கூட, அசராமல் இருந்த இந்த சிலை நிறுவப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் ஆகிறது.

சுற்றுலாப் பயணிகள்
தினசரி இந்த சிலையைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று வருகின்றனர். அதேபோல அங்குள்ள மற்றொரு முக்கிய இடம் விவேகானந்தர் பாறை. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தளத்துடன் பாலம் அமைத்து சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருந்தார்.

5 மாதங்கள் தடை
இதற்கிடையே பராமரிப்பு பணிகள் காரணமாகத் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட 5 மாதங்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்படுவதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உப்பு காற்றினால் திருவள்ளுவர் சிலை சேதமடைவதைத் தவிர்க்க இதுபோல ரசாயனக் கலவை பூசும் பணிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடைசியாக 2017ஆம் ஆண்டு இதுபோன்ற ரசாயனக் கலவை பூசப்பட்டது.

எப்போது வரை
இப்போது மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியினை தகவல் தொழில்நுட்பத்து அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக இன்று முதல் வரும் நவம்பர் 2 வரை அடுத்து 5 மாதங்களுக்குத் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிடச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன பணி
முதலில் சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்புக் கலவை பூசப்படும் பின்னர் சிலையில் படிந்துள்ள உப்புக்கரிசல்கள் காதிக் கூழ் மூலம் நீக்கப்படும். அதைத் தொடர்ந்து இறுதியில் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிலிக்கான ரசாயனக் கலவை பூசப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications