சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரூம் காலி இல்லை".. பீச் ரோடெல்லாம் பொங்கிய மகிழ்ச்சி.. குவியும் மக்கள், மீண்டும் பிஸியான புதுச்சேரி

புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய ஆரம்பித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை புதுச்சேரியில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், கடந்த 2 நாட்களிலும் புதுச்சேரி மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிவிட்டது..!

வருடந்தோறும் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமில்லாமல் எப்போதுமே புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.. அதனால் எந்நேரமும் புதுச்சேரி பரபரப்பாகவே இருக்கும்.

இங்கு யார் வந்து தங்கினாலும் ரூம் காலி இல்லை என்று சொல்லும் அளவுக்கு, ஹோட்டல்கள், ரிசார்ட்கள், நிரம்பி வழியும்.. ஆனால், திடீரென கடந்த வருடம் லாக்டவுன் போட்டுவிடவும், நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை இங்கு குறைய தொடங்கியது.

இந்திய ஒன்றியம்னு சொன்னோம்தான்- ஆனா புதுச்சேரி அரசைத்தான் குறிக்கும்.. தமிழிசையின் அடடே விளக்கம் இந்திய ஒன்றியம்னு சொன்னோம்தான்- ஆனா புதுச்சேரி அரசைத்தான் குறிக்கும்.. தமிழிசையின் அடடே விளக்கம்

தளர்வு

தளர்வு

இப்போது கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு பிறகு இந்த லாக்டவுன் தடை நீக்கப்பட்டுள்ளது... இதனால், சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி விட்டனர்.. கடற்கரை சாலையில் இவர்களின் நடமாட்டம் பெருகி கொண்டிருக்கிறது.. பூங்காக்களில் மகிழ்ச்சியாக நடமாடுகிறார்கள்.. அதிலும் நேற்று முன்தினமும், நேற்றும், பயணிகள் அதிகமாக வந்தனர்.

வருகை

வருகை

விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம், படகு துறை போன்ற இடங்களை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்... அரவிந்தர் ஆசிரமத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது... கடற்கரையில் ஆர்ப்பரித்து எழுந்த கடலில் இவர்கள் குளித்து மகிழ்ந்தனர்..

மாஸ்க்

மாஸ்க்

எனினும், எல்லாருமே மாஸ்க் அணிந்துள்ளனர்.. இந்த 2வது அலை அதிகப்படியான பயணத்தை மக்களுக்கு ஏற்படுத்தி சென்றுள்ளதால், அரசு வலியுறுத்தாமலேயே, தாங்களாகவே மாஸ்க் அணிந்தும், சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடித்தும் வருகின்றனர்.. நேற்று சண்டே மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது... ஆனால், அங்குமட்டும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது..

வீடியோக்கள்

வீடியோக்கள்

சுற்றுலா பயணிகள் அனைவருமே போட்டோ, வீடியோக்கள், செல்பிகளையும் எடுத்து மகிழ்ந்தனர். ஒருவருஷத்துக்கு பிறகு ரூம் காலி இல்லை என்று போர்டு வைக்கும் அளவுக்கு, ஓட்டல்கள் பிஸியாகி விட்டன.. இதுவரை வருமானம் இன்றி தவித்து வந்த ஓட்டல் அதிபர்கள், தொழிலாளர்கள் இப்போதுதான் மூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.. போதாக்குறைக்கு டாஸ்மாக்கும் ஏற்கனவே திறந்துவிட்டுள்ளதால், புதுச்சேரி செம பிஸியில் உள்ளது.

English summary
Tourists visits increased in Puducherry in the Last two days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X