மறக்காதீங்க.. சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க போறீங்களா? டிராபிக் போலீஸ் முக்கிய அறிவிப்பு
சென்னை: ஐசிசி 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் போட்டி நடைபெறும் நாளில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னை, அகமதபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், புனே, லக்னோ, தர்மசாலா ஆகிய 10 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் சென்னையில் அக்.08,13,18,23 மற்றும் அக்.27 ஆகிய தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி காவல்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"அக்.08,13,18,23 மற்றும் அக்.27 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை விக்டோரியா ஹாஸ்டல் ரோடுக்கு (கெனால் ரோடு) பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். ஆனால் வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதேபோல பெல்ஸ் சாலையை பொருத்த அளவில், இந்த சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு பாரதிசாலை X பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். ஆனால் வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மேலும் கண்ணகி சிலையில் இருந்து வரும் MTC பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதில் நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதே பாரதி சாலையை பொருத்த அளவில், ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். இதுவே வாலாஜா சாலையை பொருத்த அளவில், அண்ணா சாலையிலிருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் M,T,V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். அதேபோல வலாாஜா சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வானங்கள் செல்ல அனுமதி கிடையாது.
அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வரும் B&R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு செல்லலாம். அதேபோல காமராஜர் சாலையை பொருத்த அளவில் போர் நினைவுச்சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் MTV ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்தமிடங்களுக்கு செல்லலாம்.
போர் நினைவுச்சின்ன மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் B&R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை கண்ணகி சிலை பாரதி சிலை பெல் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். அதேநேரம் உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்களை பொறுத்த அளவில் அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை காமராஜர் சாலை வழியாகவும், போர் நினைவுச் சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாகவும், காந்தி சிலைகள் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாகவும் PWD எதிலே உள்ள கடற்கரை உற்ற சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்ல வேண்டும். இந்த மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications