சென்னையில் நாளை முதல் இந்த ரூட்ல போயிடாதீங்க.. ஆழ்வார்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதன் காரணமாக நாளை முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு முக்கிய மேம்பாலங்களின் கீழே உள்ள இடங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தி.நகர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்களை மொத்தம் ரூ.7.5 கோடி செலவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், பயன்படுத்தப்படாத நகர இடங்களை மேம்படுத்தி, மக்களுக்கும் பயணிகளுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின்படி, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, மகாலிங்கபுரம் சாலை சந்திப்பு மேம்பாலத்தின் கீழே உள்ள இடம், ரூ.3.75 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.
இங்கு, தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து இரு சக்கர வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் வசதி, இரு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பார்க்கிங் வசதி, உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்க 5 சிறு கடைகள், 8 கழிப்பறைகள் (3 ஆண்களுக்கு, 3 பெண்களுக்கு, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு), சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மரங்கள், செடிகள், அலங்கார விளக்குகள், பயணிகளுக்கு இருக்கை வசதி, சிசிடிவி கேமராக்கள், திசை காட்டும் பலகைகள், பார்வையற்றவர்களுக்கு உதவும் தொடு பாதை, மழைநீர் வடிகால் மற்றும் பராமரிப்புக்கு ஏற்ற தரைத்தளம் போன்றவை அமைக்கப்படுகிறது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலைசிபி ராமசாமி சாலை மேம்பாலத்தின் கீழே உள்ள இடமும் ரூ.3.75 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது. இங்கு இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பார்க்கிங், வணிகக் கடைகள், மரங்கள், அலங்கார விளக்குகள், உட்காரும் இடங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் மேம்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications