சிங்கம் சூர்யாவின் "வலதுகரத்தின்" தனிப்படை.. கவரிங் நகை அணிந்து ரயில் கொள்ளையனை பிடித்த பெண் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு ரயிலில் தனியாக வரும் பெண்களை குறி வைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்து கொள்ளையனை சாதாரண உடையில் சென்று இரு பெண் போலீஸார் மடக்கி பிடித்தனர்.

சென்னை மின்சார ரயிலை புறநகர் பகுதி மக்களும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட அண்டைய மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.

train robbery- 2 women police snatched robberer in Chennai trains

இந்த மின்சார ரயில் இவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தி அலுப்பு இல்லாமல் செய்கிறது. பெண்களுக்கென தனி கம்பார்ட்மென்ட் இருப்பதால் அதிலும் இவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வசதியாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட டிக்கெட் கட்டணம் பேருந்தை காட்டிலும் குறைவு.

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் நிறைய ரயில்கள் செல்கின்றன. இதில் அவரவர் தங்கியிருக்கும் தூரத்தின் அடிப்படையை வைத்து புறநகரில் இருந்து அதிகாலையில் பெண்கள் கிளம்பி இரவு நேரங்களில் வீடு திரும்புகிறார்கள். இது கொள்ளையர்களுக்கு சவுகரியமாக இருக்கிறது.

சென்னை ரயிலில் தனியாக நகையுடன் பயணிக்கும் பெண்களை குறி வைக்கும் மாஸ்க் அணிந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் செல்வதாக புகார்கள் வந்தன. அது போல் இரு மூதாட்டிகளை மிரட்டி தங்கக் கம்மலை திருடிய கொள்ளையன் அரசு பெண் அதிகாரியிடம் தங்க தாலி செயினை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி மறுத்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் கையை கத்தியில் கிழித்தார் அந்த கொள்ளையன். இதையடுத்து அந்த பெண்ணும் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார். இந்த கத்திக்குத்து கொள்ளையனை பிடிக்க ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவிட்டார்.

அதன்பேரில் சிங்கம் திரைப்படத்தில் சூர்யாவின் வலது கரம் போல் நடித்த நிஜ டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில் காவல் ஆய்வாளரும் பெண் போலீஸும் சுடிதார் மற்றும் சேலை அணிந்து கழுத்தில் கவரிங் செயினுடன் கடந்த 10 நாட்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஒவ்வொரு ரயிலாக பயணித்து வந்தனர்.

train robbery- 2 women police snatched robberer in Chennai trains

அப்போது ஒரு நாள் அந்த முகமூடி கொள்ளையன் ரயிலில் ஏறினான். அந்த பெண் போலீஸிடம் சென்று கத்தியை காட்டி நகையை பறிக்க முயற்சித்த போது அவரை பெண் காவல் ஆய்வாளர் மடக்கி பிடித்தார். இந்த ஆபரேஷனுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினரும் உதவி செய்திருந்தனர். இதையடுத்து கொள்ளையனிடம் விசாரித்த போது அவரது பெயர் ஆனந்தன் என தெரியவந்தது.

கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ரயிலில் ஏறிய கொள்ளையனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து துணிச்சலாக கொள்ளையனை மடக்கி பிடித்த பெண் காவலர்களுக்கும் அவர்களுக்கு உதவிய ரயில்வே போலீஸாருக்கும் ரயில்வே ஏடிஜிபி வனிதா பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதையடுத்து அந்த கொள்ளையனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+