சொந்த வாகனத்தில் பயணிகளை ஏற்றினால் ரூ. 25000 அபராதம்.. போக்குவரத்து துறை எச்சரிக்கை
சென்னை: சொந்த பயன்பாட்டிற்கான கார் உள்ளிட்ட வாகனங்களில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால் ரூ.25,000 அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வாடகைக்கு விடுவதை தடுக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சொந்த பயன்பாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்றக்கூடாது என்பது போக்குவரத்து விதி. விதிகளை மீறி வெள்ளை நிற பதிவு எண் பலகை கொண்ட வாகனங்களை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்த நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் வசதிக்காக வணிக உரிமம் இல்லாத வாடகை கார் பயன்பாடு அதிகரித்து வருவதன் எதிரொலியாக, போக்குவரத்து துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சொந்தப் பயன்பாடு வாகனங்களை விதிகளை மீறி இயக்கும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும். தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணமும் அதிகம். இதை பயன்படுத்தி சொந்த பயன்பாட்டு கார்களை பலரும் வாடகைக்கு பயன்படுத்துவதும் நடக்கும். இந்தச் சூழலில் தான் இந்த முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications