Exclusive: "எங்க அப்பா மோசம்ங்க.." பாஜகவில் இணைந்ததும்.. போட்டு தாக்கிய திருச்சி சிவா மகன் சூர்யா!
சென்னை: திமுக எம்.பி. திருச்சி சிவா ஒரு மோசமானவர் என்றும் கொள்கைவாதியை போல் வெளியே வேஷம் போட்டு திரிகிறார் எனவும் அவரது சொந்த மகன் சூர்யாவே பகீர் குற்றஞ்சாட்டுகிறார்.
Recommended Video
தனது அம்மா மறைவுக்கு பிறகு தந்தை சிவாவுடைய பாதையும், புத்தியும் சரியில்லை என சூர்யா ஆதங்கப்படுகிறார்.
திமுகவின் எதிர்காலம் கனிமொழி தான் என்றும் இப்போது தாம் பாஜகவில் இருந்தாலும் கூட கனிமொழி மீதான மதிப்பும் மரியாதையும் குறையாது எனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு சூர்யா அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம் வருமாறு;
கேள்வி: பாஜகவில் சேர வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?
பதில்: திமுகவுக்காக உழைத்ததற்கு எனக்கு அங்கீகரம் கொடுங்க என உதயநிதியையும், கனிமொழியையும் பார்த்து பல முறை கோரிக்கை வைத்தேன். கனிமொழியாவது இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது, கொஞ்சம் பொறுமையால இருங்கன்னு சொன்னாங்க. ஆனால் உதயநிதி தரப்பில் இருந்து எதுவுமே கூறவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியை எனக்கு கொடுங்கன்னு கேட்டு பணம் கட்டினேன். கடைசியில் வேறொரு இயக்கம் நடத்துறவரை அழைத்து சீட் கொடுக்கிறாங்க. திருச்சி சிவா மகனாக என்னை பார்க்காதீர்கள், கட்சிக்காக உழைக்கும் தொண்டனாக என்னை பாருங்கள் என பல முறை கேட்டுவிட்டேன். பொறுத்திருங்க என்ற பதில் கனிமொழியிடம் இருந்து வந்தது. எவ்வளவு காலம் பொறுத்திருக்கிறது. ஆளும்கட்சியாக வந்த பிறகும் பொறுத்திரு பொறுத்திரு என்றால் அது எனக்கு சரியா படல. அதனால் பாஜகவுக்கு சென்றுவிட்டேன்.
கேள்வி: திமுகவில் மிக சீனியர் எம்.பி.மகன் நீங்கள், உங்களுடைய முடிவு உங்க தந்தைக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தாதா?
பதில்: எனது அப்பாவும் நானும் பேசி 10 வருடங்கள் ஆகின்றன. அவர் ஒரு மோசமானவர். வெளியே கொள்கைவாதியை போல் தன்னை காட்டிக்கொள்வார், ஆனால் கேரக்டர் சரியில்லை. எனது அம்மா மறைவுக்கு பிறகு அவர் செல்லும் பாதை சரியில்லை. அவ்வளவு தான் சொல்ல முடியும். கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்துகொண்டேன் என்பதற்காக எனக்கு சொத்துக்களை கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டுகிறார். எனது மகன் பிறந்தநாள் விழாவை ராஜாத்தி அம்மாள், கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எனக்கு தெரிந்த தலைவர்களை அழைத்து நடத்தினேன். அதில் அழையா விருந்தாளியாக ஊடகங்களுக்காக எனது தந்தை வந்து தலையை காட்டிவிட்டு வந்தார். அப்பனும் மகனும் எப்பவேண்டாலும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று கூறி அமைச்சர் நேரு அண்ணன் கூட என்னிடம் பேசுவதை குறைத்தார். இப்படி எனது அப்பாவால் எனக்கு பின்னடைவு தான் கட்சியில் ஏற்பட்டதே தவிர ஒரு முன்னேற்றமும் இல்லை.

கேள்வி: பாஜகவில் உங்களுக்கு என்ன பதவி அளிப்பதாக உறுதி கூறியிருக்கிறார்கள்?
பதில்: பாஜகவில் நானும் பதவியை கேட்கவில்லை, அவர்களும் எனக்கு எந்த உறுதிமொழியையும் தரவில்லை. கட்சியின் ஹை கமாண்ட்டிடம் பேசிய பிறகு நல்லதொரு அறிவிப்பை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். சாதாரண தொண்டனான என்னை நள்ளிரவு 1.30 மணிக்கு அண்ணாமலை அழைத்து எனக்கு திமுக தரப்பிலும், எனது அப்பா தரப்பிலும் ஏற்பட்டிருக்கக் கூடிய அச்சுறுத்தலை கூறி உங்களுக்கு பாஜக அரணாக நிற்கும் என தைரியம் அளித்துள்ளார். இது போல் வேறு எந்தக் கட்சியிலும் ஒரு தலைவர் இந்தளவு இப்படி பேசுவாரா என எனக்குத் தெரியாது.
கேள்வி: திமுகவில் உள்ள உங்கள் நண்பர்கள் உங்கள் முடிவை எப்படி பார்க்கிறார்கள்?
பதில்: அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் திமுகவில் மாப்பிள்ளை சபரீசன் டீமை ஒழித்து ஓரங்கட்டும் பணியில் உதயநிதி டீம் இறங்கிவிட்டது. இது எனக்குத் தெரியும். சபரீசனின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் அமைச்சர் பி.டி.ஆரை உதயநிதி தரப்பு தான் குறி வைத்து அவரை ஐடி விங் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தது. இதனால் திமுகவை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். இதனால் திமுகவின் எதிர்காலம் என்று வரும் போது கனிமொழிக்கு நல்ல வாய்ப்பு அங்கு உருவாகும்.
கேள்வி: உங்கள் தந்தை திருச்சி சிவாவை பற்றி நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நன்றாக நடிப்பார், வெளியே அரசியல் சொன்னால் குடும்பத்திற்குள்ளேயே அரசியல் செய்வார். அவ்வப்போது உறவினர்கள் மூலம் என்னை அவசரப் பட வேண்டாம் எனக்கு இருப்பது ஒரே மகம் அவனுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறேன் எனக் கூறி தூது விட்டு என்னை ஆஃப் செய்வார். இதைத்தவிர வேறொன்றும் எனக்கு அவர் செய்ததில்லை. எனது தொழில் முடங்கியதற்கு காரணம் எனது அப்பா தான். ஊருக்கு மட்டும் தான் உத்தமர் வேஷம் போடுவார் அவர். இவ்வாறு திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்.
-
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
‘மெடிக்கல் மினிஸ்டர்' பதவி தர மறுத்த கருணாநிதி? எம்.ஜி.ஆர் கிளப்பிய ஊழல் புகார்.. உடைந்த திமுக! -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
உடல் மெலிந்து.. 2 மாதத்திற்கு பின் அறிவாலயம் வந்த துரைமுருகன்! கைதாங்கலாக கூட்டிசென்ற பூச்சி முருகன்












Click it and Unblock the Notifications