திமுக-அதிமுக கூட்டணி.. கிளப்பிவிட்டது யார்? 2 தியேரிகள் சுற்றி வருது
சென்னை: திமுக + அதிமுக கூட்டணி என்று கிளப்பிவிட்டது யார் என்ற கேள்வி வலுவாக எழுகிறது. ஏனெனில் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெறுப்பேற்ற அதிமுகவிற்கு நெருக்கமான சிலர் கிளப்பிவிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு சந்தேகமும் உள்ளது. ஆட்சியமைக்க போதிய எம்எல்ஏக்கள் ஆதரவை பெற முடியாத நிலை இருப்பதால் தவெக தலைவர் விஜய் தரப்பே இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு, சிம்பதி கிரியேட் செய்ய முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறார்கள். உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத அரசு அமையப்போகிறது.. ஆனால் அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இன்னும் விஜய்க்கு கிடைக்கவில்லை.. நம்பிக்கைவாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்தால், எப்படியும் மாற்றுக்கட்சி ஆட்கள் வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிற சூழலே இருக்கிறது.குறிப்பாக அதிமுக மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு தர வாய்ப்பு உள்ளது. ஆனால் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொண்டு வந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

தற்போதைய நிலையில் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.. இதில் விசிக, இடதுசாரிகள் ஆதரவு தந்தால் ஆட்சியமைக்க முடியும். அல்லது , அமமுக, பாமக , தேமுதிக போன்றவை ஆதரவு தந்தாலும் ஆட்சியமைக்க முடியும். ஏனெனில் தற்போதைய நிலையில் தவெகவிற்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளன. கூடுதலாக காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள் ஆதரவை தந்துள்ளது.இன்னும் ஐந்து பேர் ஆதரவு தேவை.
ஏனெனில் ஏதாவது ஒரு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை சிவி சண்முகம் எம்பி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் அல்லது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஏதாவது ஒன்றில் தான் அவர தொடர முடியும்.
ஒருவேளை அவர் எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்தால் இரண்டு இடங்கள் காலியாகும். அப்படி காலியானால் தேவைப்படும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை சிலமாதங்களுக்கு (தேர்தல் நடைபெறும் வரை) இன்னும் குறையும்.. எப்படி என்றாலும் 4 முதல் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கண்டிப்பாக விஜய்க்கு தேவைப்படும். எனவே கூடுதல் எம்எல்ஏக்கள் ஆதரவை பெற தொடர்ந்து முயன்று வருகிறார். அதிமுகவில் கணிசமானோர் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு இருக்கிறது.
இந்த சூழலில் திமுக + அதிமுக கூட்டணி வைத்து ஆட்சியமைக்க போவதாக வதந்தி ஒன்று வேகமாக ஆங்கில ஊடகங்களில் பரவி வருகிறது. அதனை உண்மை என்று திமுக, அதிமுக, தவெகவினர் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். அப்படி ஒரு முடிவினை எடுத்தால், அது திமுக, அதிமுகவிற்கு வரலாற்றில் இல்லாத தற்கொலை முயற்சியாக பார்க்கப்படும். அதன்பிறகு அரசியல் களமே மொத்தமாக அவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத சிக்கலை ஏற்படுத்தும்.. இதுதான் எதார்த்தம்..
அப்படியான சூழலில், ஆட்சியமைக்க போதிய எம்எல்ஏக்கள் ஆதரவை பெற முடியாத நிலை உள்ள சூழலில், விஜய்யை வெறுப்பேற்ற அதிமுகவிற்கு நெருக்கமானவர்கள் பத்திரிக்கையாளர்கள் மூலம் இந்த வதந்தியை கிளப்பிவிட்டார்களா என்ற சந்தேகம் தவெக தரப்பில் எழுப்படுகிறது.
அதேநேரம் திமுக, அதிமுகவினரோ, ஆட்சியமைக்க போதிய எம்எல்ஏக்கள் ஆதரவை பெற முடியாத நிலை இருப்பதால் தவெக தலைவர் விஜய் தரப்பே இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு, சிம்பதி கிரியேட் செய்ய முயற்சிக்கலாம் என்று அதிமுக தரப்பு குற்றம்சாட்டுகிறது. ஆக மொத்தம் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.
இன்னொரு உண்மை பலருக்கும் தெரியாது.. திமுக அதிமுக சேர்ந்தால் ஆட்சியமைக்க முடியுமா.. அப்படி ஆட்சியமைக்க முடியாது.ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும், பாமக நான்கு இடங்கிளிலும், ஐயுஎம்எல் 2 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம் தலா இரண்டு இடங்களிலும், விசிக இரண்டு இடங்களிலும், பாஜக, அமமுக, தேமுதிக தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
இதில் ஒருபேச்சுக்கு அதிமுக திமுக சேருவதாக வைத்தாலும் 47+57சேர்த்தால் 105 இடங்கள் தான் வரும்.. ஆட்சியமைக்க முடியாது. எனினும் பாமக 4 இடங்கள்+ விசிக 2 இடங்கள்+ இடதுசாரி இயக்கங்கள் தலா இரண்டு இடங்கள், ஐயுஎம்எல் 2 என சேர வேண்டும்.. அதற்கு சேர நடைமுறையில் வாய்ப்பே இல்லை. எனவே திமுக அதிமுக கூட்டணி என்பது முற்றிலும் வதந்தி தான்.














Click it and Unblock the Notifications