ஓங்கி ஒரே அடி.. வரி போட்ட டிரம்புக்கு பதிலடி! இந்திய அஞ்சல்துறை எடுத்த அதிரடி முடிவு? வெளியான தகவல்!
சென்னை: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் பல்வேறு உலக நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரை துவக்கி இருக்கிறார். குறிப்பாக நட்பு நாடாக கருதப்படும் இந்தியாவுக்கு எதிராகவே 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் சமீபத்தில் சில நாடுகளின் பொருட்களுக்கு 50% வரை இறக்குமதி வரி (Import Duty) விதிக்கும் முடிவை அறிவித்துள்ளார். இந்த வரி இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியை வெகுவாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவுகள் நேரடியாக இந்திய நுகர்வோருக்கும், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாகவும்., இதனால் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

50% வரி
இந்தியாவைப் பொறுத்தவரை தனது வெளிநாட்டு வருவாயில் ஒரு முக்கிய பங்கினை ஏற்றுமதி மூலமே பெறுகிறது. குறிப்பாக ஏற்றுமதியைப் பொறுத்தவரை அமெரிக்கா, இந்தியாவுக்கு மிகப் பெரிய வணிக சந்தை ஆக உள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அங்கு 50% வரி விதிக்கப்படுவதால் இந்தியாவின் ஏற்றுமதி வருவாய் குறையக் கூடும்.
அமெரிக்க வரி
இதனால் இந்தியாவின் வருவாய் குறைவதால், வெளிநாட்டு செலாவணி கையிருப்பு (Forex Reserve) குறையும். இதனால் ரூபாய் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டி இருக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற அபாயங்களையும் இந்தியா எதிர்நோக்கி உள்ளது.
இந்திய அஞ்சல் துறை
இந்த நிலையில் அமெரிக்காவின் 50% வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிவிப்பில்," அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும் அவற்றின் மதிப்பை பொருட்டுத்தாமல் நாடு சார்ந்த சர்வதேச அவசர பொருளாதார சக்தி சட்டத்தின் கட்டண அமைப்பின்படி சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்பிற்கும் பரிசு பொருட்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்படும்.
இறக்குமதி வரி
புதிய விதிமுறைகளின் காரணமாக ஆகஸ்ட் 25ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவுக்கு செல்லும் சரக்குகளை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு செல்லும் விமான நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றன. இது போன்ற கூறுகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்ததில் கடிதங்கள், ஆவணங்கள், மற்றும் 100% அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசு பொருட்கள் தவிர அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருள்களின் முன் பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அஞ்சல் துறை முடிவு செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications