தினகரனுடன் சந்திப்பு: பண்ருட்டி சொல்வதைப் பார்த்தால் விரைவில் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரோ?
சென்னை: இடது, வலது கம்யூனிஸ்டுகளைப் போல தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுவார் என அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் ஓபிஎஸ், தனிக் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளாரோ? என்கிற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓபிஎஸ். இதற்காக பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து இடைவிடாத சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தது ஓபிஎஸ் தரப்பு. ம்ஹூம்.. எந்த ஒரு சட்டப் போராட்டமும் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாகவில்லை.

தற்போது அதிமுக சட்டப்படியான தீர்ப்புகளின்படியே எடப்பாடி பழனிசாமி வசமாகிவிட்டது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். அதிமுகவின் பெரும்பான்மை தொண்டர்கள், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கின்றனர் என்பதையும் நிரூபித்து வருகின்றனர். இதனை இன்னமும் வலுவாக வெளிப்படுத்த களரீதியாக அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இப்படி சட்டப் போராட்டங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் தாம் இன்னமும் அசரவில்லை என்பதை காட்டுவதற்கான நடவடிக்கைகளை ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகவே நேற்று வரை எதிரியாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் வீடு தேடி போய் சந்தித்து நட்புக் கரம் நீட்டினார். இந்த சந்திப்பு ஓபிஎஸ் தரப்புக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும் தினகரன் தரப்பு அப்படியாக இதனை ரசிக்கவில்லை என்பதை அவரது ஆதரவு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தினகரனுடனான ஓபிஎஸ் சந்திப்பின் போது நடுநாயகமாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். செய்தியாளர்களிடம் பண்ருட்டி பேசும் போது, ரத்தின சுருக்கமாக வலது, இடது கம்யூனிஸ்டுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போல ஓபிஎஸ்- தினகரன் இணைந்து செயல்படுவர் என்றார். இதனை தினகரனும் ஆமோதித்தார்.

நடைமுறையில் வலது, இடது அதாவது சிபிஐ, சிபிஎம் என இரு கட்சிகள் இருக்கின்றன. இந்த இரு கட்சிகளும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்றாக கை கோர்க்கின்றன. ஆனால் ஓபிஎஸ் விவகாரத்தில் தினகரன் மட்டும்தான் தனிக்கட்சி நடத்துகிறார். ஓபிஎஸ் இன்னமும் அதிமுகவே தாம்தான் என பேசி வருகிறார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுவதை வைத்துப் பார்த்தால், அதிமுக ஓபிஎஸ் அணி என ஒரு பிரிவாக ஓபிஎஸ் தரப்பு செயல்படக் கூடும் அல்லது ஓபிஎஸ் தற்காலிகமாக ஒரு தனிக் கட்சியை தொடங்கி தினகரனுடன் கை கோர்த்து செயல்படக் கூடும். இந்த இரு வாய்ப்புகளும்தான் இப்போதைக்கு ஓபிஎஸ் தரப்பில் இருக்கிறது. இதனடிப்படையில்தான் இனி ஓபிஎஸ் காய்நகர்த்தல்கள் நடக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications