சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திக் திக் 2 to 3 ! கடைசி நேரத்தில் சீரிப்பாய்ந்த அமமுக வேட்பாளர்கள்.. வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது.. உச்சநீதிமன்றம்- வீடியோ

    சென்னை: சின்னம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக கடைசி நேரத்தில் அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

    தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்த நிலையில், அந்த கட்சிக்கு பொதுசின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து தினகரனின் உத்தரவுப்படி, வேட்பு மனு தாக்கல் முடிய ஒரு மணி நேரமே இருந்த நிலையில் அனைத்து தொகுதிகளிலும், மின்னல் வேகத்தில் சீரிப்பாய்ந்து சென்று அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    குக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் அமமுக கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணையம், கட்சியை பதிவு செய்யாததால் குக்கர் சின்னத்தை அமமுக கட்சிக்கு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    இதையடுத்து உச்சநீதிமன்றம் தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்கள அனைவருக்கும் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    டிடிவி அதிரடி உத்தரவு

    டிடிவி அதிரடி உத்தரவு

    உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வர மதியம் ஆகிவிட்டது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    உச்சகட்ட பரபரப்பு

    உச்சகட்ட பரபரப்பு

    வேட்பு மனுதாக்கல் முடிய இன்னும் மணிநேரமே உள்ள நிலையில் அனைத்து அமமுக வேட்பாளர்களும், பிற்பகல் 2 மணி அளவில் தங்கள் தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு பறந்தனர். போலீசார் முன்னெச்சரிக்கையை போக்குவரத்தை நிறுத்தி பல இடங்களில் உதவினார்கள்.இதனால் அவர்கள் 3 மணிக்குள் தேர்தல் அலுவலகங்களுக்கு சென்றனர்.

    வெற்றிகரமாக தாக்கல்

    வெற்றிகரமாக தாக்கல்

    ஏற்கனவே தயாராக வைத்திருந்த பிரமாணபத்திரம் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரியிடம் அந்த அந்த தொகுதி அமமுக வேட்பாளர்கள் வெற்றிகரமாக தாக்கல் செய்தனர். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும், புதுவையில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியிலும், அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். பொதுச்சின்னத்தை போராடி பெற்று கடைசி நேரத்தில் அமமுகவினர் வேட்பு மனுதாக்கல் செய்ததால் தமிழகம் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.

    English summary
    TTV dinakaran's ammk party candidates Filed nomination in TN on 2019 lok sabha polls
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X