சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி இல்லையாம்! அப்போ அவரா? ‘இக்கு’ வைத்து பேசிய தினகரன்! டக்கென திரும்பிய தலைகள்!

Google Oneindia Tamil News

சென்னை : 2024 தேர்தல் கூட்டணி தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குட்டையைக் குழப்பி விட்டுள்ளார். தினகரன் சொன்ன விஷயம் ஈபிஎஸ் தரப்பினரை யோசிக்க வைத்துள்ளது.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி சேரத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்த தினகரனை, 1% கூட அமமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை எனக் கூறி 'நோஸ் கட்' செய்தார் எடப்பாடி பழனிசாமி.

இதனால், கடுமையாக அப்செட் ஆன தினகரன், நான் எடப்பாடி கூட்டணியில் இணையவே மாட்டேன் எனப் பேசி வருகிறார். நேற்று கூட, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான டுபாக்கூர் அணியில் நான் இணைய வாய்ப்பே இல்லை எனக் கூறினார்.

யார் தலைமையில் கூட்டணி அமையும் என்ற கேள்விக்கு யார் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லாமல், நான் ஒரு பெயரை அனுமானம் செய்து வைத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார் தினகரன்.

ஈபிஎஸ் டீம் 'டாப்' தலைவருக்கு டெல்லி புள்ளியின் அசைன்மென்ட்? அதே நாளில் நடந்த மீட்டிங்! கேம் மாறுதே!ஈபிஎஸ் டீம் 'டாப்' தலைவருக்கு டெல்லி புள்ளியின் அசைன்மென்ட்? அதே நாளில் நடந்த மீட்டிங்! கேம் மாறுதே!

அதிமுக பிளவை ரசிக்காத பாஜக

அதிமுக பிளவை ரசிக்காத பாஜக

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, 2024 தேர்தலில் தங்களுக்கும் பாதகமாக அமையும் என்பதை உணர்ந்துள்ள பாஜக, ஒன்றுபட்ட அதிமுகவே தங்கள் விருப்பம் என உணர்த்திவிட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலை டெல்லி பாஜக விரும்பாததன் காரணமாகவே இருவரையும் தனியாகச் சந்திக்க நேரம் கொடுக்காமல் டெல்லி மேலிட தலைவர்கள் தவிக்க விட்டனர். ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் ஓரணியில் இணைந்து, மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கிறது. பாஜகவின் விருப்பத்தை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் சமரச முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த முயற்சியை திட்டவட்டமாக நிராகரித்தார்.

முக்கிய புள்ளிகள்

முக்கிய புள்ளிகள்

எடப்பாடி பழனிசாமி பேச்சை எடுத்தாலே கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் கூட, திடீரென வெள்ளைக் கொடி பறக்கவிட்டார். சசிகலா தரப்பும் கூட, ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருக்கும் முக்கியப் புள்ளிகள் மூலம் மூவ் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி துளியளவும் இறங்கி வரத் தயாராக இல்லை. டெல்லி பாஜக தலைமை சார்பில் முக்கிய புள்ளிகள் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறியும் தொடர்ந்து விடாப்பிடியாக இருந்து வருகிறார் ஈபிஎஸ். டிடிவி தினகரனை கூட்டணி சேர்க்க வாய்ப்பே இல்லை என ஈபிஎஸ் கூறியதும் டெல்லியின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

வீம்பு

வீம்பு

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அன் கோ ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோது, அவரும் பாஜக தலைமையின் முடிவை ஈபிஎஸ்ஸிடம் கூறியதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு ஈபிஎஸ் தரப்பின் நகர்வுகளை கவனித்துள்ளது பாஜக தரப்பு. ஆளுநர் சந்திப்புக்குப் பிறகும், எடப்பாடி தரப்பின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லாத தகவலும் டெல்லியின் கவனத்திற்குச் சென்றுள்ளது. ஒரு இன்ச் கூட எடப்பாடி பழனிசாமி நகரவில்லை, ஓபிஎஸ், தினகரன் விஷயத்தில் இப்போதும் வீம்பாகத்தான் பேசி வருகிறார் என டெல்லிக்கு தகவல் பறந்து கொண்டிருக்கிறதாம்.

அவங்க லெவலுக்கு வேண்டாமே

அவங்க லெவலுக்கு வேண்டாமே

இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அதிமுக தலைவர்கள் தினகரனை தொடர்ச்சியாக விமர்சிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சுயநினைவு தவறிய நிலையில் இருப்பது போன்ற மனிதரின் பேச்சிற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டாம் என்று நினைக்கிறேன். கட்சியின் லட்சியங்களையும், கொள்கையையும் பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என்றார்.

பயம் - பலம்

பயம் - பலம்

மேலும், எடப்பாடி தரப்பினரின் இந்தப் பேச்சு எல்லாம் பயத்தினால் செய்யும் நடவடிக்கை. அதனால் அதனை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், இரட்டை இலையும் கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது எனது நியாயமான கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம், ஓ.பன்னீர்செல்வத்தை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனத் தெரிவித்தார்.

இப்பவே ஃப்ரீஸ் தான்

இப்பவே ஃப்ரீஸ் தான்

ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு வந்தாலும் இந்த இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த அளவிற்கு அந்த கட்சியை பலவீனப்படுத்தியுள்ளனர். இன்றைய நிலைமையில் இரட்டை இலை சின்னம் ஃப்ரீஸ் ஆகித்தான் இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் இடைத்தேர்தல் வந்தால் சின்னத்திற்கு யார் கையெழுத்துப் போடுவது? அதன்படி பார்த்தால் சின்னம் முடக்கப்பட்டுதானே உள்ளது. நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைத்தாலும் தேர்தல் ஆணையம் அதை எப்படிப் பார்க்கிறது என்பது இருக்கிறது என்றார் தினகரன்.

டுபாக்கூர் கூட்டணி

டுபாக்கூர் கூட்டணி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி பலம் இழந்துள்ளது. குறிப்பிட்ட சிலரது நடவடிக்கைகள், அகம்பாவம், ஆணவம், பணத்திமிர் பேச்சுகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சி இருக்கிறது என்று காட்டிக்கொள்ள ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு நல்ல தலைவர் அமைவது முக்கியம். 2024 தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பது பற்றி நான் அனுமானம் செய்து வைத்திருக்கிறேன். அந்த அனுமானத்தின் அடிப்படையில் கூட்டணி அமையும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான டுபாக்கூர் கூட்டணியில் நான் இணைய வாய்ப்பே இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

இக்கு வைத்த டிடிவி

இக்கு வைத்த டிடிவி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் தான் இணைய மாட்டேன் என்றும், தான் ஒருவரை கூட்டணிக்கு தலைவராக அனுமானம் செய்து வைத்துள்ளதாகவும் தினகரன் கூறியுள்ளார். டெல்லி புள்ளிகளுடன் தொடர்ந்து டச்சில் இருந்து வரும் தினகரன் இப்படி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி தலைமையில் கூட்டணி இல்லை என்றால் பாஜக தலைமையின் கணக்கும் வேறு மாதிரி திரும்பிவிட்டதோ என எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் நிர்வாகிகளே அதிர்ந்து போயுள்ளனர்.

கணக்கு மாறுதோ?

கணக்கு மாறுதோ?

பாஜக தலைமையுடனான பேச்சுக்கு பிறகே அதிமுக கூட்டணியில் இணைய விரும்புவதாக வெளிப்படையாகவே பேசினார் தினகரன். டெல்லி வெல் விஷர்ஸ் என்னிடம் கேட்டுக்கொண்டனர் என்றும் ஓப்பனாக பாஜகவின் முயற்சியையும் தெரிவித்தார். இந்நிலையில், அவரே, வேறு ஒருவரை கூட்டணி தலைமை என அனுமானம் செய்திருப்பதாகக் கூறியிருப்பதும், ஓபிஎஸ்ஸை சந்திப்பேன் எனக் கூறி இருப்பதும், பாஜக தலைமையின் பார்வை எந்த ரூட்டில் பயணிக்கிறது என்ற குழப்பத்தையே ஈபிஎஸ் தரப்பு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

English summary
All the key parties are actively engaged in consultations regarding the 2024 election alliance. AMMK general secretary TTV Dinakaran has confused Edappadi Palaniswami faction. What TTV Dhinakaran said has made the EPS team shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X