கைவிடாதீங்க.. செயல்ல காட்டுங்க.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவியின் தாய் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரையை அரசு செயலில் காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தலையில் குண்டு பாய்ந்து மரணமடைந்த மாணவி ஸ்னோலின் தாய் வனிதா உருக்கமாக கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2018ல் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தூத்துக்குடியில் பதற்றமான சூழல் ஏற்படவே தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பொதுமக்கள் அமைதியான வழியில் போராடினர்.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி

இந்த போராட்டம் 100வது நாளை எட்டியது. 2018 மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 ஓய்வு நீதிபதி ஆணையம்

ஓய்வு நீதிபதி ஆணையம்

இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா கெஜதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018 ஜூன் மாதம் 4ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 4 ஆண்டுகளாக நடந்த விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது இந்த விசாரணை அறிக்கை முதல்வர் முக ஸ்டாலினிடம் மே மாதம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இதில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. 5 பேர் தூத்துக்குடி கலெ க்டர் அலுவலகத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். எஸ்பி, கலெக்டர் ஊரில் இல்லை. காவல் துறையினர் வரம்புமீறி செயல்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின்குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயம்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.

மாணவியின் தாய் பேட்டி

மாணவியின் தாய் பேட்டி

இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் அறிக்கை பற்றி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தலையில் குண்டு பாய்ந்து மரணடைந்த மாணவி ஸ்னோலின் தாய் வனிதா சில விஷயங்களை கூறியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் மாணவி ஸ்னோலினின் மரணம் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது 17 வயது நிரம்பி 12ம் வகுப்பு படித்த அவர் உடலில் குண்டு பாய்ந்து இறந்தார். இந்நிலையில் தான் அவரது தாய் வனிதா அறிக்கை பற்றி கூறியதாவது:

ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூட..

ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூட..

தற்போது எடுத்து இருக்கும் முடிவு என்பது மிகவும் நல்ல விஷயம். வெறும் வார்த்தையாக இல்லாமல் இதனை செயல்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இதுதொடர்பாக போன ஆட்சியில் சரியான முடிவு கிடைக்கவில்லை. கடமைக்காக ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆட்சியிலும் தற்போது வரை அதுபற்றி பேசவில்லை. இந்த ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

நிதியோடு-நினைவு மண்டபம்

நிதியோடு-நினைவு மண்டபம்

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கம்பெனி சார்பாக நாங்கள் எதுவும் வாங்கவில்லை. ஆனாலும் கோடிக்கணக்கில் வாங்கி உள்ளதாக கூறினார்கள். ரூ.20 லட்சத்தை கொடுத்துவிட்டு ரூ.20 கோடி கொடுத்தது போல் ரொம்ப பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளனர். கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஊனமுற்றவர்கள், உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். கண்டிப்பாக நிதி வழங்க வேண்டும். உயிரிழந்த 13 பேருக்கு நினைவு மண்டபம் கட்டுவதாக கூறினார்கள். 4 ஆண்டுகள் முடிந்து 5வது ஆண்டு வந்துவிட்டது. இதில் இன்னும் நல்ல பதில் இல்லை. நல்ல இடத்தில் 13 பேருக்கும் நினைவு மண்டபம் கட்ட வேண்டும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+