25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நேரத்தில்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்த வேளையில், கோட்டை நோக்கிய விஜயின் கனவில் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறதா என்கிற விவாதம் கிளம்பியுள்ளது. ஆரம்பத்தில் 25% என எகிறிய கிராப், இப்போது 15% -க்கு வந்து நின்றிருப்பதுதான் அறிவாலயத்தையும் கமலாலயத்தையும் ஒருசேர கவனிக்க வைத்திருக்கிறது.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனத் தத்துவத்தை வீசி, கட்சியின் பெயரிலேயே 'வெற்றி'யைச் சூட்டிக்கொண்ட விஜய்க்கு, ஆரம்பத்தில் இளைஞர்களிடமும் பெண்களிடமும் கிடைத்த வரவேற்பு அசாத்தியமானது. களத்தில் இறங்கிய வேகத்தில் எடுக்கப்பட்ட சர்வேக்களில், தமிழக வெற்றிக் கழகத்திற்கானஆதரவு 25 சதவீதத்தைத் தொட்டு, திராவிடக் கட்சிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் தெரிந்தது. ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போதைய களநிலவரம் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் டல்லாகவே இருக்கிறது.

சறுக்கலுக்கு என்ன காரணம்?
1. கிரவுண்ட் ஒர்க் எங்கே?
மதுரை முதல் சென்னை வரை சமூக வலைதளங்களில் தெறிக்கவிடும் த.வெ.க தொண்டர்கள், நிஜமான 'களப்பணியில்' கோட்டை விடுகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. மற்ற கட்சிகள் பூத் கமிட்டி, வார்டு வாரியாக ஆலோசனை எனத் தேர்தல் பணிகளில் வேகம் காட்ட, த.வெ.க-வின் தற்போதைய வேகம் 'ஆமை புகுந்த வீடு' கணக்காக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் முணுமுணுக்கிறார்கள்.
தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வந்தாலே அரசியல் களம் அக்னி நட்சத்திர வெயிலை விட அதிகமாய் கொதிக்கும். ஆனால், பனையூர் ஏரியாவிலோ நிலவரம் நேர்மாறாக இருக்கிறது. "தேர்தல் அறிவிப்பு வந்தா பாருங்க, எங்க விஜய் சும்மா புயலா கிளம்புவார்" என்று எகிறிக் குதித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள், இப்போது கையை பிசைந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.
கட்டுப்பாடா? தயக்கமா?
நடத்தை விதிகள் வருவதற்கு முன்பு வரை, "போலீஸ் கெடுபிடி கொடுக்குது, அனுமதி மறுக்கிறாங்க" என்று ஒரு காரணத்தைச் சொல்லி தப்பித்துக் கொண்டிருந்தனர் தவெக தரப்பினர். "இப்போ தான் எல்லாமே தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுல வந்துடுச்சே... இனிமே தளபதிக்கு என்ன தடை?" என்பதுதான் அடிமட்டத் தொண்டனின் ஆதங்கமான கேள்வி.
ஆனாலும், விஜய் இன்னும் பனையூர் இல்லத்தை விட்டு வெளியே வராமல் இருப்பது விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. தனிப்பட்ட விவகாரங்களும் பொது அரசியலும்:
பொதுவாகத் தமிழக அரசியலில் ஒரு தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவாகப் பேசப்படாது. ஆனால், விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் மற்றும் சங்கீதா தாக்கல் செய்துள்ளதாகச் சொல்லப்படும் அந்த 12 பக்க மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள், குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித யோசனையை ஏற்படுத்தியிருக்கிறது. "நமது வீட்டுப் பிள்ளை" என நினைத்தவர்களுக்கு, இந்தத் தனிப்பட்ட சலசலப்புகள் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
3. தெளிவில்லாத நிலைப்பாடுகள்:
திமுக-வை 'தீய சக்தி' என்றும், அதிமுக-வை 'அடிமை சக்தி' என்றும் சாடிய விஜய், சில முக்கிய தேசிய விவகாரங்களில் மெளனம் காப்பது அல்லது மதில் மேல் பூனையாக இருப்பது நடுநிலை வாக்காளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி பேச்சும் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது.
"சினிமா கிளாப்ஸ் அரசியலுக்கு வோட்டுகளாக மாறுமா?" - இதுதான் இப்போது கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை கேட்கும் மில்லியன் டாலர் கேள்வி.
ஆரம்பத்தில் இருந்த அந்த 25 சதவீத எழுச்சியை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமானால், வெறும் 'ஸ்கிரீன் பிரசன்ஸ்' மட்டும் போதாது; ஸ்ட்ராங்கான 'பொலிட்டிக்கல் பிரசன்ஸ்' தேவை. 15 சதவீதத்திலிருந்து மீண்டும் எகிறப்போகிறாரா அல்லது 'விஜயின் அரசியல் கனவு தத்தளிக்கப் போகிறதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்!












Click it and Unblock the Notifications