முதுகில் குத்த வேண்டாம்.. புஸ்ஸி ஆனந்த் வருங்கால முதல்வர் என போஸ்டர்.. ஈசிஆர் சரவணன் விளக்கம்
சென்னை: வருங்கால முதலமைச்சரே என்று புஸ்ஸி ஆனந்தை வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டருக்கு கீழ் ஈசிஆர் சரவணன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ஊடகவியலாளர்கள்... ஆனந்தை வருங்கால முதல்வர் என்று போஸ்ட்ர் ஒட்டியுள்ளீர்களே.. முதல்வர் வேட்பாளர் ஆனந்த் அவர்களா என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த ஈசிஆர் சரவணன்,இந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார். முதுகில் குத்த வேண்டாம் என்றும் கூறினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் திருவான்மியூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது என தெரிகிறது. ஏனெனில் தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வரும் நிலையில, சட்டசபை தேர்தலை கூட்டணி வைக்கலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்று பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தவெகவின் இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் காலை 9 அளவில் தொடங்கியது. இந்த பொதுக்குழுவுக்கு மாவட்ட அளவில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்க வந்துள்ளார்கள். இதேபோல் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இன்றைய கூட்டத்திற்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். பகல் 11 மணியளவில் தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் இடம் பெற இருக்கிறது. கூட்டணி தொடர்பாக, நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் விஜய் 12 மணியளவில் பேச உள்ளார். அப்போது தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க உள்ளார்..
தவெகவின் பொதுக்குழு நடப்பதையொட்டி, அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.அதில் ஈசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. வருங்கால முதலமைச்சரே என்று புஸ்ஸி ஆனந்தை வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டருக்கு கீழ் ஈசிஆர் சரவணன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ஊடகவியலாளர்கள்... ஆனந்தை வருங்கால முதல்வர் என்று போஸ்டர் ஒட்டியுள்ளீர்களே.. முதல்வர் வேட்பாளர் ஆனந்த் அவர்களா என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு தவெக நிர்வாகியான ஈசிஆர் சரவணன் பதில் அளிக்கையில், இந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.. இரண்டாவது பார்த்தீர்கள் என்றால், இந்த போஸ்டர் மறைமலைநகரில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நானே இப்போது தான் பார்த்தேன். அந்த மாதிரி கீழ்தரமாக எப்போதும் நாங்கள் செய்ய மாட்டோம்.. முதல்வர் என்றால், அது தலைவர் அவர்கள்தான்... அதாவது எங்கள் தளபதி விஜய் அவர்கள்தான்.. நான் 30 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்து வருகிறேன்.. என் மீது உள்ள காழ்புணர்ச்சியிலோ அல்லது மாற்றுக்கட்சியில் உள்ள யாராவதோ இந்த மாதிரி பண்ணியிருக்கலாம்.. எனக்கும் இந்தபோஸ்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்..
கடந்த முறையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர், தேனி மாவட்டத்தில் லெப்ட் பாண்டியின் பெயரை போட்டு இப்படி போஸ்டரை மாற்றி ஒட்டினார்கள்.. ஆனால் சென்னை புறநகர் மாவட்டத்தின் சார்பாக விளம்பரம் கொடுத்தோம்.. ஆனால் இப்படி தவறுகளை நாங்கள் செய்யவில்லை.. இந்த போஸ்டரை பொறுத்தவரை சாதாரணமாக இருந்து தளபதியால் வளர்ந்து வரும் என் மீது பொறாமையால் செய்திருக்கலாம்.. எனக்கும் செங்கல்பட்டுக்கும் சம்பந்தமே இல்லை..
சென்னையில் எங்குமே ஒட்டவில்லை..மறைமலை நகர், கூடுவாஞ்சேரி என செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒட்டியுள்ளார்கள். யார் ஒட்டினார்கள் என்று விசாரித்து வருகிறோம். போஸ்டர் ஒட்டியவர்கள் குறித்து விசாரித்து வருகிறேன்.. யார் ஒட்டினார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும். இதுபோல் யாரும் முதுகில் குத்த வேண்டாம்.. முடிந்தால் நேரில் வந்து பாருங்கள்..2026 தேர்தலில் சந்திப்போம்" இவ்வாறு ஈசிஆர் சரவணன் கூறினார்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே!












Click it and Unblock the Notifications