தவெக அரசுக்கு பறந்த வார்னிங்.. வாயை விட்டு ஓப்பனாக சொன்ன உயர்நீதிமன்ற நீதிபதி! விஜய்க்கு சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: போராட்டங்கள் என்பது மக்கள் தங்கள் கோரிக்கையை நோக்கி அரசை ஈர்க்க நடத்தப்படும் ஒரு நடவடிக்கை. ஆனால் தவெக ஆட்சியில் போராட்டங்களுக்கு பெரிய அளவில் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று விமர்சனங்கள் வெடித்திருக்கின்றன. இப்படி இருக்கையில், போராட்டங்கள் குறித்தும், தவெக அரசு அதற்கு அனுமதி வழங்காதது குறித்தும் உயர்நீதிமன்றம் கூறியிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றிருக்கின்றன.

போராட்டங்களை முடக்குவதால் அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகரிக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த கருத்து, தவெக அரசுக்கு வார்னிங் போல அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

TVK

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு மாசு ஏற்படுகிறது என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

ஆலைக்கு எதிரான போராட்டம்

இது குறித்து கிராம மக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது, "மாசு ஏற்படுகிறது என்று நாங்கள் ஒன்னும் சும்மா வாய் வார்த்தையில் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, ஆலை மூடப்பட வேண்டியதுதான் என்று அறிக்கை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மூட உத்தரவிடப்பட வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை அமலாக்கதான் நாங்கள் கேட்கிறோம்.

மயானத்தில் போராட்டம்

எனவே இந்த ஆலையை மூட வலியுறுத்தி நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. போராட்டம் மயானத்தில் நடக்க இருக்கிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எனவே நீதிமன்றம் உரிய அனுமதி கொடுக்க வேண்டும்" என்று மனுதாரர் கோரியிருந்தார்.

என்ன பிரச்சனை?

இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமணன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மயானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி.. மயானத்தில் போராட்டம் நடந்த அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

ஆவிகள் பிரச்சனை செய்யுமா?

மாசு ஏற்படுவதை அரசுக்கு தெரிவிக்கதான் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. மயானத்தில் போராட்டம் நடத்துவதால் இறந்து போனவர்களின் ஆவிகள் வந்து பிரச்சனை செய்யுமா? மக்களுடைய போராட்டத்தை முடக்க முடக்க அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகரிக்கும். இந்த ஆட்சியை பொறுத்தவரை திக, திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என யார் அனுமதி கேட்டாலும் வழங்குவதில்லை. ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கூட அனுமதி வழங்கப்படுவதில்லை. அவர்கள் கூட நீதிமன்றத்தை நாடுகின்றனர். எங்குமே போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை எனில்.. உயர்நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டியதுதான்" என்று நீதிபதி அதிருப்தியுடன் கூறியிருந்தார்.

இந்த கருத்தை கேட்டுக்கொண்ட காவல்துறை, அரசின் கருத்துக்களை கேட்டு தெரிவிப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

உண்மையை சொன்ன நீதிமன்றம்

போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்பது தவெக அரசின் மீதான பெரிய விமர்சனமாக இருக்கிறது. குறிப்பாக தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விமர்சனத்தை அழுத்தமாக முன்வைத்திருந்தன. ஆனால், அமைச்சர்கள்.. அப்படியெல்லம் ஒன்னும் கிடையாதே! என்று அசால்ட்டாக கூறி நழுவி சென்றனர்.

இந்த நிலையில்தான் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று உயர்நீதிமன்றமே ஒப்பனாக போட்டு உடைத்திருக்கிறது. அரசு குறித்து உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருப்பது, தவெக ஆட்சிக்கு விடுக்கப்பட்ட வார்னிங் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+