போட்றா வெடிய.. 10, +2 தேர்வில் அசத்திய மாணவர்களை சந்திக்கும் விஜய்! எப்போது தெரியுமா? வெளியான தேதி
சென்னை: தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் அரசியல் சினிமா பணிகளோடு மாணவர்கள் சந்திப்பையும் வருடம் தோறும் நடத்தி வருகிறார் அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 30ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பாராட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அதாவது 2023 ஆம் ஆண்டில் இருந்தே விஜய் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக மூன்று பேரை தேர்ந்தெடுத்து சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு பரிசு அளிப்பது வழக்கம்.
மேலும் நாள் முழுவதும் நின்று கொண்டே அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பேசு பொருளானது.

தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்தாண்டும் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் என்றே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறி வந்தனர்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பிளஸ் டூ தேர்வு கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், விரைவில் விஜய் - மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளின்படி சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்தனர். தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டும் தேதியை அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார்.
முதற்கட்டமாக முப்பது ஐந்து 2025 வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பின்வரும் மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவிகள் மாணவ மாணவிகள் பாராட்ட பெருகிறார்கள். மாணவச் செல்வங்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் அன்பும் அக்கறையும் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் இந்த விழாவில் மாணவ செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றுகளும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார்" என அறிவித்திருக்கிறார் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான ஆனந்த்.
— TVK Party HQ (@TVKPartyHQ) May 26, 2025
இந்த அறிவிப்பின்படி அரியலூர் ராணிப்பேட்டை கடலூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருவள்ளூர் தேனி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 88 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications