“தவெக ஆர்ப்பாட்டத்தின்போது சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சரி செய்து தருகிறோம்”.. மாநகராட்சிக்கு கடிதம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தொண்டர்கள் தடுப்பு கம்பிகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், அவற்றை சரி செய்து தருவதாக சென்னை மாநகராட்சிக்கு தவெக கடிதம் எழுதியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார், போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்ததைக் கண்டித்து சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அஜித் குமார் மரண வழக்கு உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தவெக சார்பில் நேற்று சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய், முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கினர். தொண்டர்களுக்கு தனியாக, நிர்வாகிகளுக்கு தனியாக என தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. தொண்டர்களுக்கு அமைக்கப்பட்டு இருந்த பகுதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக பெண் தொண்டர்கள் சிக்கி அவதி உள்ளாகியுள்ளனர். மேலும் நெரிசலில் சிக்கியதால் சிலர் மயக்கம் அடைந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள் சாலை ஓரத்தில் உள்ள சுவர்கள் மீதும், மரத்தின் மீதும் ஏறி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டனர். தவெக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய்யை பார்க்க முண்டியடித்துச் சென்ற தொண்டர்களால் சாலை நடுவே உள்ள தடுப்புகள் சேதம் அடைந்தன. சாலை நடுவே இருந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பைப்புகள் மீது தொண்டர்கள் ஏறியதில், அனைத்தும் சேதம் அடைந்து சாலையில் உடைந்து கிடந்தது.
சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு தடுப்பு கம்பிகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், சாலை நடுவே பராமரிக்கப்பட்டு வந்த செடிகளும் கடுமையாக சேதமடைந்தன. அதேபோல் போலீசார் சாலைகளில் பயன்படுத்தும் பேரிகார்டுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளருக்கு தவெக மாவட்ட செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை சிவானந்தா சாலையில் இருந்த தடுப்புக் கம்பிகள் மற்றும் பிற இடங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்து தருவதாக குறிப்பிட்டுள்ளார். அதனை சரி செய்வதற்கு அனுமதி தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்











Click it and Unblock the Notifications