முரளிதரன் சினிமா-விஜய்சேதுபதி முடிவெடுக்காவிட்டால் எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும்: வேல்முருகன்
சென்னை: முத்தையா முரளிதரன் சினிமா தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி உரிய முடிவெடுக்காவிட்டால் உரிய எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சினிமாவில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சிங்களருக்கு ஆதரவாக இருக்கும் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது பொதுவான எதிர்ப்பு.

இது தொடர்பாக விஜய்சேதுபதிக்கு கவிஞர் தாமரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்.. அவரது படத்தில் நடிப்பதை விட பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதுதான் உங்களுக்குப் பொருத்தம் என்று கூறியிருந்தார். கவிஞர் தாமரையின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


இதனிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் கவிஞர் தாமரையின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். மேலும், கவிஞர் தாமரை அவர்களின் மேற்கண்ட கருத்தை முழுமனதோடு ஏற்கிறேன். நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் உலகத் தமிழினத்தின் வேண்டுகோளை ஏற்று விரைவில் உரிய முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.
இல்லையெனில் இனிவரும் காலங்களில் இதற்கான எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும் என்றும் நம்புகிறேன் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications