“எங்கள் கொள்கைத் தலைவி”.. வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி பனையூரில் மரியாதை செலுத்திய தவெக விஜய்!
சென்னை: வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தவெக தலைவர் விஜய். வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த நாளில் பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி எனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்திப் போராடியவர் வேலு நாச்சியார். வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்.

வேலு நாச்சியாருக்கு விஜய் மரியாதை
தவெக தலைவர் விஜய், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
தவெக கொள்கைத் தலைவி
முன்னதாக, மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக, வீரமங்கை வேலுநாச்சியாரும் முக்கிய இடத்தை பெற்றுள்ளார். அவரை அரசியல் வழிகாட்டியாகவும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொண்ட நிலையில், வேலு நாச்சியாருக்கு இன்று விஜய் மரியாதை செலுத்தி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டு மேடையின் பக்கவாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார் ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் ராணி சக்கந்தி முத்தாத்தாளுக்கும் 1730 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். ஆண் வாரிசு இல்லாததால் ஆண் பிள்ளை போலவே வீர தீரத்துடன் வளர்க்கப்பட்டார். வாள் வீச்சு, வில் அம்பு பயிற்சி, சிலம்பம், வளரி எரிதல், குதிரை ஏற்றம் என போர் பயிற்சிகள் அனைத்தும் கற்றதுடன் பல மொழிகளையும் கற்றறிந்தார் வேலு நாச்சியார்.
பின்னர், சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னரான முத்துவடுகநாததேவரை மணந்து சிவகங்கைச் சீமையின் ராணியானார். ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கணவனையும் நாட்டையும் இழந்த நிலையில், தன்னம்பிக்கையோடு போராடி இழந்த மண்ணை மீட்டார். இந்திய அளவில் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட முதல் பெண் போராளியாக வீரமங்கை வேலுநாச்சியார் கருதப்படுகிறார்.
-
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்











Click it and Unblock the Notifications