தவெகவிற்கு 18% வாக்கு வங்கி.. விஜய் எடுத்த சீக்ரெட் சர்வே.. ஆனால் அதில்தான் ஒரு ட்விஸ்டே.. போச்சு
சென்னை: சட்டமன்றத் தேர்தலை நோக்கிய தனது அரசியல் பயணத்தில் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவரது கட்சி நடத்திய ரகசியக் கணக்கெடுப்பு (Survey) குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. ஒரு தனியார் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) மாநில அளவில் 18 சதவீத வாக்கு வங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் இங்குதான் பெரிய ட்விஸ்ட் உள்ளது.
இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த வாக்குகள் இடங்களாக மாறுவதில் (Seat Conversion) சிக்கல் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

பரவலான வாக்குகள் - பலவீனமான வெற்றி
இந்த ஆய்வின்படி, விஜய்க்கு இருக்கும் 18% ஆதரவு என்பது மாநிலம் முழுவதும் சீராகப் பரவி இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் குவியாமல், அனைத்துத் தொகுதிகளிலும் பரவலாக உள்ளது.
அரசியல் ஆலோசகர்களின் கணிப்புப்படி, ஒரு தொகுதியில் வெற்றி பெற 35% முதல் 40% வரை வாக்குகள் தேவை. தவெக-விற்கு 18% வாக்குகள் எல்லா இடங்களிலும் கிடைத்தால், அது மற்ற கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் "வாக்குகளைப் பிரிக்கும்" (Vote Splitter) கட்சியாக மட்டுமே இருக்கும். இதனால், மொத்தமாக 18% வாக்குகளைப் பெற்றாலும், சட்டமன்றத்தில் 1 அல்லது 2 இடங்களை மட்டுமே தவெக-வால் வெல்ல முடியும் என அந்த சர்வே சுட்டிக்காட்டுகிறது.
ஆலோசகர்களின் எச்சரிக்கை
"ஒவ்வொரு தொகுதியிலும் 18% வாக்குகளைப் பெறுவது என்பது தேர்தலில் தோல்வி அடையவே வழிவகுக்கும்" என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளுக்குத் குறிப்பிட்ட மண்டலங்களில் (உதாரணமாக கொங்கு மண்டலம் அல்லது தென் தமிழகம்) வலுவான வாக்கு வங்கி உள்ளது. ஆனால், விஜய்யின் வாக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடங்காமல் இருப்பதால், அது வெற்றியாக மாறுவதில் கணித ரீதியான சவால்கள் உள்ளன. என்னதான் விஜய் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் அவர்கள் தொகுதி வாரியாக பார்த்தால் குறைவாக இருக்கிறார்கள்.
தொண்டர்கள் மற்றும் வியூக மாற்றம்
இந்தத் தகவல் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 18% ஆதரவை வைத்துக் கொண்டு எப்படி அதிக இடங்களை வெல்வது என்பது குறித்து அரசியல் ஆலோசகர்கள் விஜய்க்குப் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்:
கூட்டணி அவசியம்: ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்திருக்கும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே, இந்த 18% வாக்குகளை 35%-ஆக உயர்த்தி வெற்றிக் கனியை எட்ட முடியும். ஆனால் இப்போது கூட்டணி இல்லை என்று ஆகிவிட்டது. நேற்று மீட்டிங்கில் அதற்கும் கடையை சாத்திவிட்டார்கள்.
கவனம் செலுத்தும் தொகுதிகள்: 234 தொகுதிகளிலும் முழு கவனம் செலுத்தாமல், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 40-50 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு மட்டும் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த மாதம் தொடங்கவுள்ள தேர்தல் பிரச்சாரங்களின் போது தனது பரவலான ரசிகர் மன்ற பலத்தை ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் சக்தியாக விஜய் எப்படி மாற்றப்போகிறார் என்பதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications