முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்க கேரளா சதி.. வேல்முருகன் 'திடுக்' குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லைப் பெரியார் ஆற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024 இல் கேரள அரசின் நீர்வளத்துறை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை வரும் மே 28 தேதி பரிசீலனைக்காக ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பட்டியலிட்டுள்ளது.

TVK Velmurugan urges Tamil Nadu Govt should stop Kerala s New Mulla Periyar dam

எங்கே அமைகிறது?: இந்த புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, பெரியார் கிராமத்தில் அமைகிறது. இந்த இடம் வண்டிப்பெரியாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. தற்போது இருக்கும் அணையிலிருந்து 1200அடி கீழ்திசையில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள அணையின் வயது 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பற்ற நிலையை எட்டியுள்ளதாகவும், அணை உடைந்தால் கேரளாவில் பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளா சொல்வது என்ன?: மேலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கான நீரைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யவும், இப்புதிய அணை அவசியம் எனவும், புதிய அணை கட்டிய பின்னர் தமிழ்நாட்டிற்கு இப்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும் என கேரள அரசு கூறியிருக்கிறது.

பாசாங்கு காட்டும் கேரளா: கேரள அரசு மேற்குறிப்பிட்டிருக்கும் வாதம், தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளது போல் பாசாங்கு காட்டி, முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்து தரைமட்டமாக்க மூர்க்கமாக முயலுகின்ற வார்த்தை தான். உச்ச நீதிமன்றம் 27-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்த பிறகு முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புறக்கணிக்கும் கேரளா: ஆனால், கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் சிறிதுக் கூட உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை. 142 அடி வரை தண்ணீர் தேக்க விடாமல் தமிழ்நாட்டிற்குத் தடுத்துவிட்டார்கள். சிற்றணையை செப்பனிடவும் விடவில்லை. மண்ணியல் வல்லுநர் குழுவையும், நீரியல் வல்லுநர் குழுவையும் அமர்த்தி அவற்றை கள ஆய்வு செய்ய வைத்து, அந்த குழு அளித்த பரிந்துரைக்கு ஏற்பவே மேற்படித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அத்தீர்ப்பையும் கேரள அரசு பின்பற்றவில்லை.

தகர்க்க
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதி திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப் போவதாக கேரள அரசு ஆசை வார்த்தை காட்டியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அவர்கள் கூறி வரும் பேரழிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. காரணம் அந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 10 டி.எம்.சி. மட்டுமே. (1 டி.எம்.சி = நூறு கோடி கன அடி). முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும்.

கேரளாவின் திட்டம் இதுதான்: இந்த இடுக்கி அணை பாதியளவு நிரம்புவதற்குக் கூட அதற்கு நீர்வரத்து இல்லை. இந்த அணையை முழுக் கொள்ளளவும் நிரப்பி, ஆண்டு முழுவதும் நீர் மின்சாரம் தயாரிக்க முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே கேரள அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த அவர்கள் வகுத்த சூழ்ச்சி திட்டமே முல்லைப் பெரியாறு அணை வலுக்குறைவாக உள்ளது, அது எந்த நேரத்திலும் உடைந்துவிடும் எனவே அதை உடைத்துவிடவேண்டும் என்ற பரப்புரையாகும்.

அன்றைய ஒப்பந்தம்: வெள்ளைக்காரன் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நாட்டி 1924இல் சிறந்ததொரு ஒப்பந்தம் செய்து வைத்தான். டெல்லி ஆட்சியில் அது செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். காலம் காலமாகக் காவிரியில் பாசனம் பெற்ற 28 லட்சம் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது. கடந்த 1895இல் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி 999 ஆண்டுகளுக்கு அது தமிழ்நாட்டிற்குரியது என்று ஒப்பந்தம் செய்து வைத்தான் வெள்ளைக்காரன். இன்று அந்த ஒப்பந்தம் செல்லாது என்கிறார்கள். அணையை உடைக்க நாள் பார்க்கிறார்கள். அந்த அணையால் பாசனம் பெற்ற 2 லட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

காவிரி, பாலாறு, பெரியாறு: 1950க்குப் பிறகு பாலாற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டது ஆந்திரா அரசு. இப்போது, மேலும் அணைகளை கட்ட முயலுகிறது ஆந்திரா அரசு. இனி பாலாற்றில் இருந்து கசிவு நீர் கூட தமிழகத்திற்கு வராது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று மூன்றையும் இழந்துவிட்டால் பாசனத்திகு மட்டும்மல்ல குடிநீருக்கும் கூட தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடையாது.

தடுத்து நிறுத்த வேண்டும்: எனவே, தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது. கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+