பாஜக வேண்டாம்.. நடப்பதை பார்த்துக்கலாம்.. நெருக்கமானவர்களிடம் சொன்ன விஜய்.. துணிச்சல் முடிவு?
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவை சித்தாந்த எதிரியெனக் கூறி, அதனுடனோ அல்லது அதிமுகவுடனோ எந்தக் கூட்டணியும் இல்லை என மறுத்துள்ளது. டெல்லி சிபிஐ விசாரணைக்கு பின் விஜய் இந்த முடிவை தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியதாக தெரிகிறது.
அதாவது பாஜக எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் சிக்கல் இல்லை.. சமாளிக்கலாம்.. கூட்டணி மட்டும் வைக்க வேண்டாம் என்று விஜய் திட்டவட்டமாக இருக்கிறாராம். ஆனால் தவெக கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் மட்டும்.. விஜய் கூட்டணிக்கு போனால் நல்லது. பாஜக உடன் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும். கூட்டணி வலிமையாக அமையும்.. ஆட்சியையும் பிடிக்கலாம் என்று விஜயிடம் கூறி வருகிறாராம். ஆனால் அந்த நிர்வாகியின் கருத்தை விஜய் பெரிதாக காதில் போட்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

விஜய்க்கு மீண்டும் சம்மன்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ. நடிகர் விஜய்க்கு ஜனவரி 19-ல் சம்மன் அனுப்பியுள்ளது.
விஜயின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், பொங்கல் வெளியீட்டை அப்படம் தவறவிட்டது. இதையடுத்து, தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
திரைப்படச் சான்றிதழை முடக்குவது, விஜயை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்து, திமுகவுக்கு எதிராக அரசியல் ஒப்பந்தத்திற்காக பாஜகவின் சதி என தமிழக திமுக - காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். சி.பி.ஐ. விசாரணை முடிந்து விஜய் சென்னை திரும்பியதும், தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
விஜய்க்கு நெருக்கடி
ஆனால் தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்து NDA கூட்டணியை உருவாக்க முயலும் பாஜக, நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து தீவிரமாக ஆராய்வதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைப்பதற்கு முன் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு வருகையின்போது கட்சி மையக் குழுக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் நான்கே இடங்களை வென்ற பாஜகவால், 2024 மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தைக் கூட பெற முடியவில்லை என்பதால், அவரது அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏன் சந்திக்கவில்லை?
கூட்டணித் தலைவர் இ.பி.எஸ்-ஐ தமிழ்நாட்டில் அமித் ஷா திட்டமிட்டு சந்திக்காதது, என்.டி.ஏ அனைத்து தி.மு.க எதிர்ப்புச் சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதற்காகவே என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கூட்டணியில் எடப்பாடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படாது.. மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும் என்று அமித் ஷா சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. விஜயுடன் கூட்டணி வைக்க அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்தும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சாத்தியக்கூறுகளை பாஜக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மதச்சார்பின்மை கருத்தில் காங்கிரசுடன் இயல்பான கூட்டாளிகள் என்று தவெக கடந்த வாரம் அறிவித்த பின்னரே, பா.ஜ.கவின் முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன.காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைப்பதற்கு முன் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications