கண்ணை மூடிக்கொண்டு.. ஜோசியர் சொல்வதை கேட்கும் விஜய்? இப்படி ஒரு முடிவா? அதிர வைத்த பின்னணி
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஜோசியர் ஒருவரை தீவிரமாக நம்புவதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை வைத்துதான் விஜய் முக்கியமான பல முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் சம்பவத்திற்கு பின்பும் கூட அடிக்கடி ஜோசியர் உடன் விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். ஜோசியர் அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று ஆலோசனை செய்து உள்ளாராம். இப்போது நேரம் உங்களுக்கு சரியில்லை. உங்கள் ஜாதகப்படி இப்போது கொஞ்சம் கஷ்டம். ஜனவரிக்கு பின் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை கொஞ்சம் யோசித்து காய் நகர்த்தவும் என்று அந்த ஜோசியர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

கரூர் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வரும் அக்டோபர் 17ம் தேதி சந்திக்க விஜய் திட்டமிட்டு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜய் அவர்களை சந்திக்கவில்லை. வேலுச்சாமிபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் இந்த முடிவை பின்னர் மாற்றிக்கொண்டார்.
விஜய்க்கு அவரின் ஜோசியர் ஒருவர் குறித்து கொடுத்த அறிவுரையின் படி.. அவர் இந்த முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது. நீங்கள் தீபாவளிக்கு முன் அவர்களை சந்திக்க வேண்டாம். வேறு ஒரு நாள் குறித்து கொடுக்கிறேன் என்று அந்த ஜோசியர் கூறியதால் விஜய் அந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியானார்கள். இந்த விவகாரத்திற்கு பின் அரசியல் ரீதியாக விஜய் அப்படியே முடங்கிப்போய் உள்ளார். அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள், கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஜோசியரை தீவிரமாக நம்பும் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மிக தீவிரமாக ஒரு ஜோசியரை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயிடம்.. ஜனவரி வரை சவால்கள் இருக்கும்.. அதற்கு பின் இப்போது நிலவும் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார்.
விஜயின் பெரும்பாலான முடிவிற்கு அரசியல் தாண்டி.. அவரின் ஜோசியர் ஒருவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அரசியல் ரீதியாக அவர் முடிவுகளை எடுக்காமல் பல இடங்களில் ஜோசியர் சொன்னதை கேட்டு முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அந்த ஜோசியர்தான் பிரச்சாரத்தில் எந்த தேதியில் பேச வேண்டும் என்று சனிக்கிழமை ஐடியாவை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கரூர் விஜய் திடீர் ஆலோசனை
ஜனவரி வரை சவால்கள் இருக்கும். அதற்கு பின் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார். விஜய் தான் எடுக்கும் பெரும்பாலான முடிவுகளை அந்த ஜோசியர் சொன்னதை கேட்டே எடுப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TVK அரசியல் முடிவுகளை கூட அவர் இதை நம்பித்தான் எடுக்கிறார். தவெக எல்லாம் இருக்கட்டும்.. பர்சனல் முடிவுகளை கூட அவரை நம்பித்தான் எடுக்கிறார். விஜய் பெரும்பாலும் அரசியல் ஆலோசகர்கள் சொல்வதை விட.. இந்த ஜோசியர் சொல்வதைத்தான் அதிகம் கேட்கிறார். நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் பல முடிவுகளை அதை வைத்து எடுப்பது சரியில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலர் புலம்பி வருகிறார்களாம்.
-
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்!












Click it and Unblock the Notifications