புதுச்சேரி ஆட்சி கன்பார்ம்? முதல்வர் வேட்பாளர் ரெடி.. புஸ்ஸியா? விஜய் அடித்த டிக்.. பயங்கர பிளான்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக முயன்று வருகிறதாம். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதோடு சேர்த்து அடுத்த வருடம் புதுச்சேரியிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறாராம்.
புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் தவெக தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். அதாவது புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்த் களமிறக்கப்பட வேண்டாம் என்று விஜய் நினைக்கிறாராம். இதற்கு பின் சில காரணங்களும், விஜயின் சில யோசனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்திற்குள் நிலவும் உள் முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. புஸ்ஸி ஆனந்தின் சமீபத்திய செயல்பாடுகளிலும், அவரது அணுகுமுறைகளிலும் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்தின் முக்கிய பொறுப்புகள் குறித்த பல புகார்களை விஜய் பெற்று வருவதாகவும், அவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் விவகாரம்
புஸ்ஸி ஆனந்தின் சில செயல்கள் விஜயை கடுப்பாக்கி உள்ளதாம். இந்த அதிருப்திக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை அவர் கையாண்ட விதம். நிவாரணப் பணிகளை ஆனந்த் சரிவர ஒருங்கிணைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சரியான நேரத்தில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஊடகங்களைத் தவிர்த்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதது, எதிர்மறையான எண்ணத்தை மேலும் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொன்று அவர் தலைமறைவானதை விஜய் விரும்பவில்லை. மற்ற நிர்வாகிகள், விஜய் உட்பட பலர் பொதுவில் வந்தனர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் அப்படியே தலைமறைவாகிவிட்டார். அதன்பின் வந்தவரும் கட்சி பணிகளை சரியாக செய்யவில்லை. ஒரு பிரச்சனை என்றதும் அப்படியே காணாமல் போய்விட்டார். மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், ஆனந்த் எதிர்பார்த்தபடி கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை உருவாக்கவில்லை. பல மாவட்ட அளவிலான பதவிகள் இன்னும் காலியாக உள்ளன. மேலும் பல பகுதிகளில் முறையான கட்சி அமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை. இந்த மெதுவான முன்னேற்றம் கட்சியின் விரிவாக்கத் திட்டங்களைப் பாதித்துள்ளதாகத் தொண்டர்கள் கூறுகின்றனர்.
விஜய் போடும் திட்டம்
இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சிக்குள் சீனியரான செங்கோட்டையன் வருகை புரிந்து உள்ளார். இவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கும் இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். ஏற்கனவே அருண், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்போது செங்கோட்டையனும் வந்துள்ளதால் அவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம்.
இதனால் புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரிக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று விஜய் யோசிக்கிறாராம். அங்கே புஸ்ஸி தலைமையில் தேர்தல் பணிகளை தீவிரமாக நடத்தி, அவரை அங்கே வெல்ல வைத்து முதல்வராக்கி விடலாம்.. தமிழ்நாட்டில் செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவியை கொடுக்கலாம்.
இதனால் உட்கட்சி மோதல் வராது. தமிழ்நாடு முழுமைக்கும் இனியும் புஸ்ஸி ஆனந்தை நம்பி இருக்க முடியாது. செங்கோட்டையனை இனி கட்சிக்குள் முன்னிறுத்தலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புதுச்சேரிக்கு புஸ்ஸி சென்றால்.. தமிழ்நாட்டில் தவெக உள்ளே மோதல்கள், கருத்து வேறுபாடுகள் குறையும் என்று விஜய் நினைக்கிறாராம்.












Click it and Unblock the Notifications