"நோவ் நக்கல்ணா உனக்கு".. பொதுக் குழுவில் சத்தமே இல்லாமல் விஜய் செய்த சம்பவம்
சென்னை: கரூர் விவகாரம் அமைதியோ அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய், தற்போது அதே விவகாரத்தை அஸ்திரமாக எடுத்து விஜய்யை தாக்க தொடங்கிவிட்டார். தவெக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய விஜய், உச்சநீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திமுக வழக்கறிஞர்கள் திக்கி திணறி நின்றது. முதல்வர் ஸ்டாலினுக்கு மறந்துவிட்டதா என்று சில விநாடிகள் வாய் மீது கைது வைத்து திமுக மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சீண்டும் விதமாக கிண்டலடித்தது வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்கு பிறகு சுமார் ஒரு மாதத்திற்க மேலாக சைலண்ட் மோடில் இருந்த தவெக மற்றும் விஜய் தற்போது 2026 தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். பொதுக்குழு கூட்டத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக ஓப்பனாக பேசியுள்ளார்.

விஜய் பேசும்போது, "கரூர் சம்பவம் நடந்த பின் காவல்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தது ஏன் என்று மக்களே கேட்டனர். அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன். கரூர் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது அத்தனை வடிகட்டிய பொய்.. கோரிக்கையே வைக்கப்பட்டாமல் எஸ்ஐடி அமைக்கப்பட்டது ஏன் என்று உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது.
1972க்கு பின் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இல்லாததால், திமுக தலைமை இப்படியே தான் இருக்கிறது. இப்போது நாங்கள் கேள்வி கேட்கவில்லை.. இதெல்லாம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. தமிழக அரசு மீதான நம்பிக்கையும் மண்ணிற்குள் புதைந்துவிட்டது. இது புரியவில்லை என்றால், திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் அழுத்தமாக புரிய வைப்பார்கள்." என்றார்.
மேலும் விஜய், "உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசுக்காக வாதாடிய அறிவார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பதில் சொல்ல இயலாமல் வாய் மூடி மௌனம் காத்ததை நாடே.." என்று சொல்லி விஜய் சில நொடிகள் தன் வாயில் கையை வைத்து கிண்டலடித்தார். பிறகு புன் சிரிப்புடன் தொடர்ந்தவர், "பார்த்ததல்லவா. இதையும் முதல்வர் அவர்கள் மறந்துட்டாரா." என்று கூறினார்.
விஜயின் இந்த சர்கசம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபுதேவா - வடிவேலு நடித்த மனதைத் திருடிவிட்டாய் படத்தில், அவர்களின் காமெடி இப்போதும் மக்களிடம் நன்கு பிரபலம். அதில் ஒரு இடத்தில் வடிவேலு பேசும்போது, பிரபுதேவா வாயில் கைவைத்து சிரிக்கும் ரியாக்ஷன் சமூகவலைதளங்களில் இப்போதும் மீம்ஸ்களாக வைரலாகி உள்ளது.
அதை நினைவு கூறும் வகையில் தான் விஜய் இப்படி செய்ததாக அவரின் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் சிலர், "நோவ் உனக்கு சரியான நக்கல்ணா." என்று கலாய்த்தும் பதிவிட்டு வருகிறார்கள். திமுகவைவும், முதல்வரையும் நேரடியாக சீண்டியிருப்பதால் அதற்கு திமுக நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications