தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துவிட்டது. இந்நிலையில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் இன்று முழுவதும் நோன்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.. பாஜக தரப்பில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்தனர்.

தவெக இஃப்தார் விருந்து
ஆனால் தவெக தரப்பில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் என்று ஆதவ் கூறியுள்ளார். தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் விஜய் கலந்து கொண்டு நேர்காணல் செய்தார்.
புதுச்சேரி வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று முன் தினமும், தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் நேர்காணல் பனையூரில் நேற்றும் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தவெக சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மாமல்லபுரம் பகுதியில் இன்று இஃப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விஜய் நோன்பு
இன்று மாலை 6 மணியளவில் மாமல்லபுரம் தனியார் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 1,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதற்காக விஜய் இன்று முழுவதும் நோன்பு வைத்து, மாலை இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு நோன்பை திறக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications