வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க.. திமுக காரன்கிட்டயேவா.. கிருஷ்ணசாமி மகன்.. திமுக எம்பி மோதல்!
எம்பி செந்தில்குமார் - ஷ்யாம் கிருஷ்ணசாமி ட்விட்டரில் மோதி கொண்டனர்
சென்னை: "SC என்பது கறை என்றால் டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி, வரும் 2021 தேர்தலில் உங்கள் கட்சி ரிசர்வ் தொகுதியில் இனி நிற்க மாட்டோம் என்று உறுதிபட கூறமுடியுமா.... இது நாள் வரை பெற்ற உரிமைகள் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா., பெற்ற படிப்பு/வேலை சலுகைகள் திரும்ப தருவதற்கு நீங்கள் தயாரா திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்ப.. "வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க.. இங்கே ஒட்ட நறுக்கப்படும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் பதிலடி தந்துள்ளார்.
நேற்று லீவு நாள் அதுவுமா செந்தில்குமார் ட்விட்டரே படு ஹாட்டாக இருந்தது! சாதி ஒழிப்பு மற்றும் கலப்பு திருமணம் பற்றின விவாதத்தை பற்றிதான் பரபரப்பு கருத்துக்கள் விழுந்தபடி உள்ளன.

டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டார். "அதில் கலப்பு திருமணங்கள் நடந்தால் சாதி ஒழிந்துவிடுமாம்- திராவிட புத்தகவாசிகள். நல்ல ஒழியும் பாருங்க.. இரண்டு சாதி கலவரத்தில் முடியும். நடைமுறையை ஒரு காலத்திலும் பேச மாட்டார்கள். சரி திராவிடம் பேசுபவர் குடும்பத்திலாவது செய்கிறார்களா பார்த்தால் சாதி ஒழிய முதலில் சமூக இணக்கம் வரனும்" என்று பதிவிட்டிருந்தார்..
Wow!Just luv this guy @DrShyamKK
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 8, 2020
விவாதத்திற்கு வர தைரியம் இல்ல
இதில் comedy
"வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க
இங்க ஒட்ட நறுக்கப்படும்"
தோழர்@DrShyamKK #தைரியம் இருந்தால் டிவி விவாதத்திற்கு வாருங்கள் அங்க வந்து வால நறுக்கி காட்டுங்கள்😜.
திமுககாரன் கிட்டயே வா pic.twitter.com/NjWETdPpqK
அத்துடன் இன்னொரு பதிவையும் போட்டிருந்தார். "நேற்று திமுகவிற்கு வந்த @DrSenthil_MDRD உங்களுக்கு சொந்த தொகுதியான தர்மபுரியில் வாய்ப்பு, முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா ஏன் சொந்த பெரம்பலூர் தொகுதி பொது தொகுதியானவுடன் மறுக்கப்பட்டு, நீலகிரிக்கு மாற்றப்பட்டார்? மூன்று முறை வென்ற தொகுதி கூடபொது தொகுதியில் போட்டியிட தடையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்
So டிவியில் விவாதிக்க நீங்கள் @DrShyamKK தயார் இல்லை
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 8, 2020
நான் உங்கள் கேள்விகளுக்கு இங்கே பதில் சொல்லிவிட்டால்.
இதே கேள்வியுடன் நாளை வேறு ஒருவர் வருவார்
I don't have the quality time to keep on repeating already answered questions
டிவி விவாதம் என்றால் கறை நல்லது என்று நிரூபிப்பேன்😊
பெயரை குறிப்பிட்டு ஷ்யாம் அப்படி பதிவு போடவும், திமுக எம்பி செந்தில்குமார் பதிலளித்து ட்வீட் போட்டார்... "SC என்பது கறை என்றால்@DrShyamKKவரும் 2021 தேர்தலில் உங்கள் கட்சி ரிசர்வ் தொகுதியில் இனி நிற்க மாட்டோம் என்று உறுதிபட கூறமுடியுமா....இது நாள் வரை பெற்ற உரிமைகள் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா.,பெற்ற படிப்பு/வேலை சலுகைகள் திரும்பப் தருவதற்கு நீங்கள் தயார என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அத்துடன் நில்லாமல், "நாங்கள் சொல்வது உரிமை.நீங்களும் உங்கள் தந்தையும் கூறுவது கறை. உங்கள் சமுதாயத்திற்கு @DrShyamKK @DrKrishnasamy பாதுகாவலர்கள் அல்ல. இன்னமும் உரிமை கேட்டு போராடும் மக்கள் சமூகத்தில் உள்ளார்கள். கறை என்று கூறும் நீங்கள் இனி ரிசர்வ் தொகுதியில் நிற்காமட்டோம் என உறுதி அளிக்க முடியுமா? என்றும் மற்றொரு கேள்வி கேட்டிருந்தார்.
கலப்பு திருமணங்கள் நடந்தால் சாதி ஒழிந்துவிடுமாம்- திராவிட புத்தகவாசிகள்.
— Shyam Krishnasamy (@DrShyamKK) March 8, 2020
நல்ல ஒழியும் பாருங்க.. இரண்டு சாதி கலவரத்தில் முடியும். நடைமுறையை ஒரு காலத்திலும் பேச மாட்டார்கள்.
சரி திராவிடம் பேசுபவர் குடும்பத்திலாவது செய்கிறார்களா பார்த்தால் 🤷🏻♂️
சாதி ஒழிய முதலில் சமூக இணக்கம் வரனும்
இதற்கு ஷ்யாம் கிருஷ்ணசாமி தந்த பதிலடியில், "திருப்பி தர தயார் என்று எப்பவோ சொல்லிவிட்டோம்...சரி நீங்க வன்னியரே இல்லாத தொகுதியில் போட்டியிட தயாரா?அ.ராசாவுக்கு சொந்த தொகுதி குடுக்கவில்லை? கனிமொழி,நாடார் சாதி பாசத்தில் தான தூத்துக்குடியில் நின்றார்? திமுக இனி சாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தும் என உறுதி அளிக்க முடியுமா?"

"சாதி ஒழிய கலப்பு திருமணம் செய்யச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் திமுக MPக்கள் சொந்த குடும்பத்தில் எத்தனை கலப்பு திருமணங்கள் என்று சொல்ல தயங்குவது ஏன்?! அந்த சமூக பொறுப்பு உங்களுக்கு ஏன் இல்லாம போச்சு? மத்தவன் அடிச்சுகிட்டு சாவனும்.. நீங்க சொந்த சாதியிலேயே வசதியா இருப்பீங்க!" என ஷ்யாம் பதிவிட்டார்.
நான் விவாதிக்க தயார்..
— Shyam Krishnasamy (@DrShyamKK) March 8, 2020
ஸ்டாலின் அல்லது உதயநிதியிடம் கேட்டு சொல்லுங்க MP sir 🙂
அவர்கள் One on Oneக்கு தயார் என்றால் நாங்களே செலவு ஏற்பாடு எல்லாம் பார்த்துக்கொள்கிறோம்.
உங்க Sun TV, Kalaingar TV, Puthiya Thalaimurai Tv எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்.
Are they ready? https://t.co/KHlkfn9521
பிறகு திடீரென செந்தில்குமார் "நடுநிலையாளர் ஒருவருடன் பொதுவிவாதத்துக்கு தயார்" என்றார்.. இதற்கு ஷ்யாம், "நான் விவாதிக்க தயார்.. ஸ்டாலின் அல்லது உதயநிதியிடம் கேட்டு சொல்லுங்க MP sir.. Slightly smiling face அவர்கள் One on Oneக்கு தயார் என்றால் நாங்களே செலவு ஏற்பாடு எல்லாம் பார்த்து கொள்கிறோம். உங்க Sun TV, Kalaingar TV, Puthiya Thalaimurai Tv எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே தான். are they ready" என்று கேள்வி கேட்டார்.
மேலும், "திமுக MP சார் @DrSenthil_MDRD உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க 😉இங்க ஒட்ட நறுக்கப்படும் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் தராமல் அடுத்த விமர்சனத்துக்கு போகலாமா? விவாதத்தை துவங்கியது நீங்கள், நான் கேள்விக்கு பதிலும் குடுத்துவிட்டேன்.. உங்கள காணவில்லையே..." என்றார் ஷ்யாம்.
"விவாதத்திற்கு வர தைரியம் இல்ல... இதில் comedy.. "வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்"... தோழர்@DrShyamKK #தைரியம் இருந்தால் டிவி விவாதத்திற்கு வாருங்கள் அங்க வந்து வால நறுக்கி காட்டுங்கள்... திமுககாரன் கிட்டயே வா.." என்று செந்தில்குமார் பதிவிட்டார்.
இப்படியே அந்த ட்விட்டரில் கருத்து போர்கள் வலுத்தன.. இதற்கு இரு தரப்பின் ட்வீட்களுக்கும் ஆதரவும், எதிர்ப்புமான கமெண்ட்கள் பதிவாகி கொண்டே உள்ளன..
-
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!












Click it and Unblock the Notifications