செங்கல்பட்டு அருகே கண் இமைக்கும் நேரத்தில் எமனாக வந்த கார்.. எஸ்ஐ உள்பட இரண்டு காவலர்கள் பலி
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று காலை (திங்கள்கிழமை) நடந்த சாலை விபத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு பெண் காவலர்கள் உயிரிழந்தனர். மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயஸ்ரீ (38) மற்றும் காவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா (33). மேற்கண்ட இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று (நவம்பர் 4ம் தேதி) காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தான் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையை, அடுத்த மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக 38 வயதாகும் ஜெயஸ்ரீ என்பவர் பணிபுரிந்து வந்தார். இதேபோல் 33 வயதாகும் நித்யா என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். காவலர்கள் இருவரும் வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில். பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலர் நித்யா படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேல்மருவத்தூர் போலீஸார், காயமடைந்த காவலர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். மேலும், உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ) உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் நித்யாவும் சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுவாக கார்களில் செல்வோர், அதிவேகமாக செல்லும் போது, அதாவது 110, 120 கிமீ வேகத்தில் செல்லும் போது, முன்னால் செல்லும் வாகனங்கள் அதே வேகத்தில் சென்றால் பிரச்சனை ஏற்படுவது இல்லை... மாறாக கண் இமைக்கும் நேரத்தில் முன்னால் செல்லும் வாகனங்கள் பிரேக் பிடிக்கும் போது, அல்லது வேகம் குறைவாக செல்வோரை கடைசி நொடியில் கவனித்துபிரேக் பிடிக்க முயலும், வாகனம் கட்டுப்பாட்டை இழக்கிறது. அதன்பின்னர் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதுகிறது.இப்படித்தான் தேசிய நெடுஞ்சாலைகளில் பல விபத்துக்கள் நடந்துள்ளது. அப்படி நடந்த விபத்தில் தான் இன்று காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications