மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வா? மத்திய அரசு பல்டி
சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தி உள்ள மாநிலங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பெறப்படும் மதிப்பெண்களின் சிறந்த மதிப்பெண்ணைத் தக்கவைத்துக்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் இரண்டு தேர்வு எழுத வேண்டும். அதில் எதில் அதிக மதிப்பெண் எடுக்கப்படுகிறதோ அந்த மதிப்பெண் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இது கட்டாயம் இல்லை. இரண்டு தேர்வையும் எழுத விரும்பினால் எழுதலாம் என்று அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்தி உள்ள மாநிலங்களில் மட்டும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது.

புதிய பாடத்திட்டம்: கல்வி அமைச்சகத்தின் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒன்றுக்கு பதிலாக இரண்டு மொழிகளைக் கற்க வேண்டும். மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு போதுமான நேரமும் வாய்ப்பும் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள் வழங்கப்படும்.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களில் போர்டு தேர்வுக்கு வரலாம் , இரண்டு முறை தேர்வு எழுதலாம்,. அதில் பெறும் மதிப்பெண்களின் அவர்கள் சிறந்த மதிப்பெண்ணைத் தக்கவைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள பாடங்களின் தேர்வானது கலை, அறிவியல் மற்றும் வணிகம் போன்ற பிரிவுகளுக்கு மட்டும் என்ற நிலை இப்போது உள்ளது.
இது மாணவர்கள் பல்வேறு துறைகளில் இருந்தும் படங்களை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்க தேர்வு செய்ய முடியும். பல புதிய பிரிவுகள் இதில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கலை, அறிவியல் மற்றும் வணிகம் தாண்டி புதிய பாடங்கள் கொண்டு வரப்படும்.
(தனித்துவத்துடன்.. தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.. அறிவிப்பு)
புதிய கல்விக்கொள்கை: இந்தியா முழுக்க புதிய தேசிய கல்விக்கொள்கையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. கல்வி மற்றும் திறன் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வரும் முனைப்பில் உள்ளது. அதோடு மூன்றாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்றும், விருப்ப அடிப்படையில் மாணவர்களை மூன்றாவது மொழியை தேர்வு செய்யலாம் என்றும் இந்த புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசும் புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதே புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து இருந்தது. ஆட்சிக்கு வந்த போதும் புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து வந்தது. அதிலும் மும்மொழி திட்டம் காரணமாக புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பாலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications