தனித்துவத்துடன்.. தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.. பிடிஆர் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுக்க புதிய தேசிய கல்விக்கொள்கையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. கல்வி மற்றும் திறன் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வரும் முனைப்பில் உள்ளது. அதோடு மூன்றாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்றும், விருப்ப அடிப்படையில் மாணவர்களை மூன்றாவது மொழியை தேர்வு செய்யலாம் என்றும் இந்த புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசும் புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

திமுக
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதே புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து இருந்தது. ஆட்சிக்கு வந்த போதும் புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து வந்தது. அதிலும் மும்மொழி திட்டம் காரணமாக புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பாலைகள் ஏற்பட்டது.

எதிர்ப்பு
இந்த நிலையில்தான் இதுவரை தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை அமலுக்கு வராத நிலையில், தமிழ்நாட்டுக்கு என்று தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். புதிய பாடத்திட்டங்கள் அடங்கிய, மாணவர்களின் கல்வி மற்றும் அறிவுத்திறனை பெருக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட உள்ளது.

பாடத்திட்டம்
மாநிலக் கல்வி கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களை கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அரசு நியமிக்கும். இந்த பாடத்திட்டம் தனித்துவமான முறையில், உலக தரத்துடன் வடிவமைக்கப்படும். கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் பயன் அடையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
Recommended Video

அறிவிப்பு
அடிப்படை கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல 'எண்ணும் எழுத்தும் திட்டம்' தொடங்கப்படும். எண்ணும் எழுத்தும் இயக்கம்' ₹66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முழுக்க 413 கல்வி நிறுவனங்களுக்கு தலா 40 கையடக்க கணினிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.13.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications