Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டிவனம், செய்யாறில் 2 பெரும் தொழிற்சாலைகள்.. 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு- ஸ்டாலின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடமாவட்டங்களில், தொழில் வளர்ச்சியை பெருக்க, திண்டிவனம் மற்றும் செய்யாறு பகுதியில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் பல குவிந்துள்ளன.

இதன் காரணமாகதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பணி நிமித்தமாகவும் தொழில் செய்யவும் இந்த மாவட்டங்களுக்கு அதிகப்படியாக மக்கள் வருகிறார்கள்.

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

இன்னொரு பக்கம் தமிழகத்தின் வட மாவட்டங்களான, திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம் போன்றவை தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கிறார்கள். இந்த நிலையில்தான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் திண்டிவனம் ஆகிய இரண்டு நகரங்களிலும் மிகப்பெரிய தொழிற்சாலை கொண்டுவரப்படும், அதில் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இன்று சட்டசபையில், முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் அதிரடிகள்

ஸ்டாலின் அதிரடிகள்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உரையாற்றினார். இன்று முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதிலளித்து பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். எட்டு வழி சாலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும், என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.

22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

இந்த அறிவிப்புகளோடு சேர்த்து மற்றொரு முக்கிய அறிவிப்பாக, செய்யாறு மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மிகப் பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய் பரவல், ஊரடங்குகள், காரணமாக வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் இந்த சூழ்நிலையில் இது ஒரு முக்கியமான அறிவிப்பாகும். நேரடியாக 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றால், மறைமுகமாக, 4 மடங்கு அதிகம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் தொழில் துறை சார்ந்த நிபுணர்கள். ஆனால் என்ன தொழில் நிறுவனம் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உள் மாவட்டங்கள் மீது கவனம்

உள் மாவட்டங்கள் மீது கவனம்

வட மாவட்டங்கள் என்று சொன்னால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மட்டுமே இதுவரை வந்த அரசுகளால் அதிக கவனம் கொடுக்கப்பட்டது. இப்போது முதல் முறையாக வட உள் மாவட்டங்களுக்கும் அரசு கவனம் கொடுக்க ஆரம்பித்துள்ளது ஒரு நல்ல சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மக்கள் தொகை பெருக்கம் அதிகரிப்பதை குறைப்பதற்கும், அனைத்து பகுதிகளுக்கும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு இது போன்ற திட்டங்கள் உதவும் என்று திருவண்ணாமலை மற்றும் பகுதிகளும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகள் இருக்கின்றன அங்கு புதிதாக வேலைவாய்ப்பு அந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

மதுரைக்கு தெற்கே

மதுரைக்கு தெற்கே

அதேநேரம் மதுரைக்கு தெற்கே தொழில்வளர்ச்சிமோசமாக இருப்பதையும் தமிழக அரசு கவனிக்க வேண்டும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தொழில் நிறுவனங்களை கொண்டுவருவதே அரசின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்கிறார்கள் தொழில்துறை வல்லுனர்கள்.

நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா

நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா

தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்களை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். நாங்குநேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றுமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் அறிவித்தது ஏட்டளவில் தான் இருக்கிறது. அதை ஸ்டாலின் அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+