சினிமா டைரக்டராக வீட்டை விட்டு வெளியேறிய போனில் ஆழம் பார்த்த போது சிக்கிய இரு பிளஸ் 2 மாணவர்கள்
சென்னை: சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டுக்கு தெரியாமல் வெளியேறிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை போலீஸார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையை சேர்ந்த வேலுச்சாமி மற்றும் அய்யனார் நகரை சேர்ந்தவர் சரவணன் ஆகியோர்களது மகன்கள் இருவருக்கும் 17 வயதாகிறது. இருவரும் பிளஸ் 2 படித்து வருகிறார்கள்.
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் வீட்டுக்கு தெரியாமல் 12 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த புதன்கிழமை சென்னைக்கு சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

சென்னையில் தங்கிய சிறுவர்கள்
இந்த நிலையில் சென்னையில் தங்கியிருந்த வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்ணிடம் செல்போனை வாங்கி அவர்களது பெற்றோருக்கு யாரோ பேசுவது போல் பேசினர். அப்போது என்னங்க உங்க பசங்க காணாமல் போய்ட்டாங்களாமே , கிடைச்சாங்களா என கேட்டுள்ளனர்.

சநதேகமடைந்த மாணவர்கள்
இதையடுத்து சந்தேகமடைந்த மாணவர்களின் பெற்றோர் உடனே வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போதுதான் அவர்கள் இருவரும் காணாமல் போன சிறுவர்கள் என தெரியவந்தது.

காவல் துறை
மேலும் இருவரும் அந்தப் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை காவல் துறை மற்றும் அங்கிருந்த அவர்களது உறவினர்கள் மூலம் இருவரையும் போலீஸார் மீட்டு வேடசந்தூர் கொண்டு வந்தனர். இருவருக்கும் அறிவுரை வழங்கிய போலீஸார் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பெற்றோர்கள்
இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூறிவிட்டு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் கிடைத்த மகிழ்ச்சியில் நிம்மதியுடன் வீடு திரும்பினர். எனினும் இது போன்று சினிமா மோகத்தால் வெளியேறும் சிறுவர்கள் ஆபத்தில் சிக்கவும் வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து பெற்றோருக்கு தெரியாமல் எதையும் செய்யக் கூடாது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications