கிரேட் எஸ்கேப்.. 2 வயது குழந்தை மீது ஏறிய ரயில்.. ஒரு சின்ன காயம் கூட இன்றி உயிர் தப்பிய அதிசயம்
ரயிலுக்கு அடியில் சிக்கிய 2 வயது குழந்தை உயிர் தப்பி அதிசயம் நடந்துள்ளது
சென்னை: கிரேட் எஸ்கேப்.. சரக்கு ரயிலில் சிக்கிய சிறுவன் ஒருவன், சின்ன காயமுமின்றி தப்பிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆக்ராவில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சிகரமாக உள்ளது... இந்த வீடியோவை பார்த்தாலே மனசெல்லாம் பதறி போய்விடுகிறது.
ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் பல்லப்கர் என்ற ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.. இங்கு தண்டவாளத்தில், 2 வயது குழந்தை தன்னுடைய 14 வயது அண்ணனுடன் விளையாடிகொண்டிருந்தான்.

தண்டவாளம்
சிறிது நேரத்தில், அந்த சிறுவனின் அண்ணன் தண்டவாளத்தை விட்டு வெளியே சென்று விட்டான்... ஆனால், குழந்தை தண்டவாளத்திலேயே தனியாக நின்று கொண்டு விளையாடியது.. அப்போது திடீரென ஒரு சரக்கு ரயில் வேகமாக வந்தது.

தண்டவாளம்
தண்டவாளத்தில் குழந்தை இருப்பதை பார்த்துவிட்ட டிரைவர் திவான் சிங் மற்றும் அவரது உதவியாளர் அதுல் ஆனந்த் ஆகியோர் பதறியபோய், அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தி அந்த ரயிலை நிறுத்த விரைந்தனர்... ஆனால், முடியவில்லை.. ரயில் குழந்தையை கடந்து சென்ற பிறகுதான் நின்றது.

குழந்தை
ரயில் மொத்தமாக கடந்து சென்று குறிப்பிட்ட தூரத்தில் நின்றுவிட்ட நிலையில், திவானும், அதுலும், ரயிலிலிருந்து வெளியே குதித்து ஓடி வந்தனர்.. அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று பயந்தபடியே பார்த்தனர். என்னே அதிசயம்.. குழந்தை அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

நிம்மதி
உடம்பில் ஒரு சிறு காயமும் இல்லை.. இதை பார்த்தபிறகுதான் அவர்களுக்கு நிம்மதியே வந்தது. ரயில் வந்துவிடவும் பயந்துபோய் குழந்தை அழுது கொண்டிருந்தான்.. உடனே அவனை பத்திரமாக தூக்கி கொண்டனர்.. பெற்ற தாயிடம் குழந்தையையும் ஒப்படைத்தனர். இந்த அதிசய வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

உயிர் தப்பினான்
இதைபற்றி ஆக்ரா டிவிஷனல் ரயில்வேஸின் கமர்ஷியல் மேனேஜர் எஸ்.கே. ஸ்ரீவஸ்தவா சொல்லும்போது, "அவன் அண்ணன் விளையாடும்போது, அந்த குழந்தையை வேறு இடத்தில் விட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும்.. அப்படியே, அங்கேயே விட்டுவிட்டு போயிருக்க கூடாது.. நல்லவேளை குழந்தை உயிர் தப்பித்தான்" என்றார். இந்த ரயில்வே ஸ்டேஷன் எப்பவுமே பிஸியாக இருக்குமாம்.. இந்த சம்பவம் நடந்தபோதுதான் கூட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது.. அதனால்தான், குழந்தைகள் அங்கே விளையாட சென்றுள்ளதாக தெரிகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications