அறிவுரை எல்லாம் வேண்டாம்.. கருணாநிதியின் ஜீன், ரத்தம் உதயநிதியிடம் உள்ளது.. அன்பில் மகேஷ் ஒரேபோடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதிக்கு அறிவுரை எல்லாம் வேண்டாம். ஏனென்றால் அவர் கருணாநிதியின் பேரன், அவரது ஜீன், ரத்தம் எல்லாம் அப்படியே உள்ளது. அந்த உழைப்பை கண்டிப்பாக உதயநிதி செய்வார் என அவரது நண்பரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தான் இந்நிலையில் தான் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறப்பேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

விளையாட்டு துறை அமைச்சர்

விளையாட்டு துறை அமைச்சர்

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இளைஞர்களாக முன்னேற்றம்

இளைஞர்களாக முன்னேற்றம்

இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், எண்ணும் எழுத்து, இன்னுயிர் காப்போம் எனும் முதல்வரின் கனவு திட்டங்களில் இளைஞர்களாக நாங்கள் இருந்து இன்னும் நிறைய மேம்படுத்தப்படுத்த முடியும் என நிரூபிக்க உள்ளோம். காரில் வரும்போதே இல்லம் தேடி கல்விக்கு எத்தனை மையங்கள் உள்ளது, தன்னார்வலர்கள் எவ்வளவு பேர் உள்ளனர், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் முறை என்ன?, எத்தனை மாணவர்கள் வருகிறார்கள், இவ்வளவு நாள் எத்தனை பேர் பயன்பெற்றுள்ளனர் என்பது பற்றிய என்னிடம் உதயநிதி கேட்டார். அதனை கூறினேன்.

கட்சிக்கு நல்ல பயன்

கட்சிக்கு நல்ல பயன்

இந்த மாதிரி ஆய்வு தொடர்பாக அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு செயல்படும் பக்குவத்தை உதயநிதி பெற்றுள்ளதை என்னால் உணர முடிகிறது. நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார். கட்சியை பொறுத்தவரை இளைஞரணி செயலாளராக உதயநிதி உள்ளார். தற்போது இளைஞர் நலன் துறையையும் கூடுதலாக நிர்வகிக்க உள்ளார். இது நிச்சயம் கட்சிக்கு நல்ல விதத்தில் பயன்பெறும். பொதுவாக இளைஞர் சமுதாயத்துக்கு நல்லதாக அமையும்.

அறிவுரை தேவையில்லை

அறிவுரை தேவையில்லை

உதயநிதிக்கு அறிவுரை எல்லாம் வேண்டாம். ஏனென்றால் அவர் கருணாநிதியின் பேரன், அவரது ஜீன், ரத்தம் எல்லாம் அப்படியே உள்ளது. அந்த உழைப்பை கண்டிப்பாக உதயநிதி வழங்குவார். இதுதொடர்பாக உதயநிதியே, தந்தையிடம் இருந்து எடுத்து கொண்ட ஆயுதம் ஒன்றே ஒன்று தான் அது உழைப்பு என தெரிவித்து இருந்தார். அதனை அவர் நிச்சயம் செய்து காட்டுவார்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+