கஞ்சா சேல்ஸ்! “நெஞ்சுக்கு நீதி”க்கு பேனர் ! வசமாய் சிக்கிய தினேஷ்! உதயநிதி ஸ்டாலின் மன்ற செயலாளராம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அருகே கல்லூரி மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற செயலாளர் என்பதும்,கஞ்சா விற்ற பணத்தில் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு பேனர் வைத்ததும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 'கஞ்சா ஆபரேசன் 2.O' என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 2..O வை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் நடத்தி வருவதோடு, நூற்றுக்காணக்கானோரை கைது செய்து வருகின்றனர்.

கஞ்சா விற்பனை

கஞ்சா விற்பனை


இந்நிலையில், சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கலால் ஆய்வாளர் சரவணன் தலைமையில் கஞ்சா விற்பனை செய்யும் நபரை கண்டறிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் ஈடுபட்ட விசாரணையில் அவர் தாம்பரம் சானடோரியத்தை சேர்ந்த அர்ஜீன் என்பதும், அருண் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டால் கஞ்சா கொண்டு வந்து தருவார் அதை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக கூறினார்.

இருவர் கைது

இருவர் கைது

அதனடிப்படையில் அருணிடம் தொடர்பு கொண்டு கஞ்சா கேட்ட போது பல்லாவரத்தை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் கஞ்சாவை கொடுத்தனுப்பினார். இருவரையும் கைது செய்த கலால் போலீசார் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாள் இருவர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரியான வாண்டு(எ) அருணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சா வியாபாரியான தினேஷ், நடிகர் தயாரிப்பாளர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

பல்லாவரம் நகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தில் செயலாளராக இருக்கும் தினேஷ், உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளிவந்தபோது ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பல இடங்களில் போஸ்டர் ஒட்டியதும், திரைப்படம் வெளியான திரையரங்குகளில் பிரம்மாண்ட கட் அவுட் வைத்ததும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+