Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதற்கு முன்னதாக கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். அத்துடன் இதுவரை உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த மகளிருக்கு, புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 1 கோடியே 14 லட்சத்து 65,525 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 1 கோடியே 15 லட்சம் மகளிர் பயன் பெற்று வருகிறார்கள் என கூறினார்.

Udhayanidhi Stalin important announcement about Kalaingar Magalir Urimai Thogai

புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு

மேலும், கடந்த 19 மாதங்களில் மட்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.21,657 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த மகளிருக்கு, புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

"வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2.0 வெற்றியைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் மேலும் 120 வட்டாரங்களில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் உலக வங்கியுடன் இணைந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0 தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.66 கோடி செலவில் வழங்கப்பட இருக்கிறது.

சுய உதவிக்குழு

பழங்குடியினர், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட 2,500 சிறப்பு சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.25 கோடி வாழ்வாதார நிதியாக வழங்கப்படும். சென்னை மெரினா கடற்கரையில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் மண்டல அளவிலான 5 உணவுத் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது.

மாற்றுத் திறனாளிகள்

நடப்பு ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் ரூ.400 கோடி அளவில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும். நலிவுநிலை மக்களுக்காக ரூ100 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி வழங்கப்படும். நலிவுற்றோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பழங்குடியினர்களின் அவசர தேவைகளுக்காக இந்த நிதி அரசு சார்பில் செலவிடப்படும்.

பண்ணைசாரா செயல்பாடு

ரூ.90 கோடி சமுதாய முதலீட்டு நிதி: இந்த ஆண்டு 6000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். இதன்படி 6000 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் இந்த நிதி வழங்கப்படும். பண்ணை மற்றும் பண்ணைசாரா செயல்பாடுகளைச் சேர்ந்த 530 பல்வேறு வாழ்வாதாரக் குழுக்கள் ரூ.80.57 கோடி செலவில் ஊக்குவிக்கப்படும். உற்பத்தி செலவுகளை குறைத்தல், லாபத்தை அதிகரித்தல், மேம்படுத்தப்பட்ட பேரம் பேசும் சக்தி ஆகியவற்றினால் பயனடைய உதவுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள நான்கு வட்டாரங்களில் வறுமையை ஒழிக்கும் விதமாக 6,000 மிகவும் ஏழை மற்றும் நலிவுற்ற குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு ரூ. 25 கோடி மதிப்பீட்டில் நிலையான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் வல்லுநர்களைக் கொண்டு ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 2500 புதிய சமுதாய திறன் பள்ளிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். ஊதிய வேலைவாய்ப்பு, சுயதொழில் தொடங்குவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து தொழிற்பயிற்சிகள் அளிக்க ஒவ்வொரு சமுதாயத் திறன் பள்ளிக்கும் ரூ.70,000 முதல் ரூ.100,000 வரை வழங்கப்படும்.

சுழல் நிதி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு:15,000 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.50 கோடி சுழல் நிதி வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் செயல்படும் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஊக்குநர், மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆளுமை மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி ரூ.3.82 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வலிமையான இளைஞர்களை உருவாக்க, வளமான தமிழகம் படைத்திட, சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மனநலம் காத்தல், மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி ரூ.2.50 கோடி செலவில் வழங்கப்படும்.

மதி அனுபவ அங்காடி

சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாநிலம் மற்றும் மண்டல அளவில் 5 வணிக சந்திப்புகள் ரூ.2 கோடி செலவில் நடத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை மொத்த கொள்முதல் செய்யவும், வாங்குவோருக்கும், விற்போருக்கும் இணைப்பு மற்றும் வியாபார தொடர் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநில அளவில் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மதி அனுபவ அங்காடியின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் 3 மதி அனுபவ அங்காடிகள் ரூ.1.50 கோடி செலவில் மாவட்டங்களில் அமைக்கப்படும்.

வேலைவாய்ப்பு முகாம்கள்

சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் 20 லட்சம் மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி ரூ.131 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்.மாநிலம் முழுவதும் 100 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இளைஞர் திறன் திருவிழாக்கள் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.

பூங்கா பராமரிப்பு

பசுமை சூழலை உருவாக்கும் விதமாக நகர்ப்புறங்களில் உள்ள 50 பூங்காக்களின் பராமரிப்பை சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்வதற்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் விதமாக அடுக்குமாடி மற்றும் பெரு நிறுவனங்களில் 25 கண்காட்சிகள் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர், பெருநிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மத்தியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

அமேசான், பிளிப்கார்ட்

சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவைகளின் கூட்டமைப்புகள் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ள ரூ.50 லட்சம் செலவில் பிற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தேசிய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 1000த்துக்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்களை வர்த்தக இணைய தளங்களில் ரூ.50 லட்சம் செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தகத் தளங்களில் மகரிள் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நகர்புறத்தில் உள்ள 100 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 100 மின் ஆட்டோக்கள் வழங்கப்படும்." இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+