நம் வீட்டுப் பிள்ளைகள் என்னதான் வேலைக்கு போனாலும்.. அந்த ஒரு குறை மட்டும் இருக்கு! -உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஒரு காலத்தில் UPSC முடிவு வந்தால் 25 % முதல் 30 % வரை தமிழ்நாட்டு தேர்வர்கள் வென்றதாவும் இன்று அந்த நிலை இல்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ் ஒன்றிய அரசின் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பேசிய போது இதனைக் கூறினார். மேலும், அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது;

''என்னதான் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும், அரசு அலுவலகங்கள் குறிப்பாக ஒன்றிய அரசினுடைய அலுவலகங்கள் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகின்றது.
ஒரு காலத்தில் UPSC முடிவு வந்தால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை நம்முடைய தமிழ்நாட்டு தேர்வர்கள் வென்றார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. மாறிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. எனவேதான், எந்த ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு சென்றாலும் நம்முடைய மாநிலத்தவர்கள் அதிகாரிகளாக இருப்பது சிறிது காலமாக, ஆண்டுக்காண்டு அது குறைந்து கொண்டே வருகின்றது.
பல குக்கிராமங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழி பேசுபவர்களே அதிகளவில் மேலாளர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் இங்கிருக்கக்கூடிய நம்முடைய பாமர மக்கள் வயதான குடிமக்கள், வங்கி சேவைகள் பெறுவதில் கொஞ்சம் சிரமப்படுகிறார்கள்.
மொழி ஒரு தடையாக இருப்பதால் அரசு சேவை, சேவை சென்றடைவதில் ஒரு தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே ஒன்றிய அரசு தேர்வுகள் தமிழ் நாட்டு மாணவர்களும், அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தான் இந்த நான் முதலில் போட்டித் தேர்வுகளை நான் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி தொடங்கி வைத்தேன்.

Staff Selection Commission, Indian Railway Service, Indian Institute of Banking, Personnel Service போன்ற தேர்வுகளுக்குக் கட்டணம் இல்லாமல் 100 நாட்களுக்கு பயிற்சி பெறும் இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மத்தியிலும், போட்டித்தேர்வு ஆர்வலர்களிடமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பதை நாம் காணமுடிகிறது.
இந்தப் பிரிவு தொடங்கி வைக்கப்பட்ட மூன்றே மாதங்களில் இன்றைக்கு 29024 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பத்தாம் வகுப்பு மதிப்பெண், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்றுள்ள சதவீதம் மற்றும் இடஒதுக்கீட்டு முறையில் 6900 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதனால் கூடுதல் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் மட்டுமே 3042 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிலிருந்து 450 பேரை தேர்வு செய்து, சென்னை மாவட்டத்தில் மட்டும் இன்று 3 பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. அதில் ஒரு தேர்வு மையம் தான் இன்று நாம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளோம்.
இதன் மூலமாக UPSC, Staff Selection Commission, Indian Railways ஆகிய தேர்வுகளுக்கு அதிக அளவிலான தேர்வாளர்களை நிச்சயம் தயார்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ''












Click it and Unblock the Notifications