தந்தையை போலவே சென்னை மேயராக 'டெபுட்டாகும்' உதயநிதி ஸ்டாலின்.. அடுத்த ப்ரமோஷன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவாக அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்துள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக புரமோஷன் பெறப் போகிறார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் கூறுகின்றன.

மறைந்த முதல்வர் கருணாநிதி அரசியலில் உச்சத்தில் இருந்தபோது, அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்.

அவசர கால அடக்குமுறையின்போது சிறையில் வாடியது, திமுக இளைஞரணி செயலாளர் போன்ற அரசியல் அனுபவங்கள் அவருக்கு கை கொடுத்தன. இதனால் 1996ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கவனிக்க வேண்டியது, வாக்காளர்களால் மேயர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை கொண்டு வரப்பட்ட பிறகு மேயரானவர் ஸ்டாலின். முதலில் தலைநகர நிர்வாகம் பிறகு மாநில நிர்வாகம் என்பதுதான் கருணாநிதியின் யோசனையாகவும் இருந்தது.

மேயராக ஸ்டாலின்

மேயராக ஸ்டாலின்

அதேபோல சென்னைக்கு மேயராக ஸ்டாலினும், தமிழகத்தின் முதல்வராக கருணாநிதியும் அந்த காலகட்டத்தில் பதவி வகித்தனர். மாநகராட்சிக்கு நிறைய நலத் திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் நிறைய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் 2001ல் ஆட்சி மாறியதும் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனக் கூறி கருணாநிதியை ஜெயலலிதா ஆட்சி சிறையில் அடைத்தது வேறு கதை. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

ஸ்டாலின் பதவிகள்

ஸ்டாலின் பதவிகள்

ஸ்டாலின் மேயராக இருந்தபோது, செய்த நலப் பணிகளால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தன. பிற்காலத்தில் அவர் கருணாநிதி ஆட்சி காலத்தில் துணை முதல்வராக "பதவி உயர்வு" பெற்றார். 13-5-2006 முதல் 15-5-2011 வரை தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 29-5-2009 முதல் 15-5-2011 வரை தமிழக அரசின் துணை முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் பதவி வகித்தார். இந்த நிர்வாக அனுபவங்கள் இப்போது அவர் முதல்வராக வீற்றிருக்க உதவியுள்ளன.

நிர்வாக அனுபவம்

நிர்வாக அனுபவம்

இதேபோல உதயநிதி ஸ்டாலினுக்கும் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் தேவை என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலின்போது, சென்னை மாநகர மேயர் தேர்தலில் திமுக சார்பில் உதயநிதியை களமிறக்க ஸ்டாலின் யோசிப்பதாகவும் தெரிகிறது.

உதயநிதி ஸ்டாலின் வளர்ச்சி

உதயநிதி ஸ்டாலின் வளர்ச்சி

தான் வந்த வழியிலேயே தனது மகனும் வருவதுதான் நல்லது.. அதுதான் அவருக்கு அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். ஆனால், உதயநிதி ஸ்டாலினை உள்ளாட்சித் துறை அமைச்சராக்கலாமே என்ற யோசனைகளும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படுகிறதாம். இதுவும் கருணாநிதி ஆட்சி காலத்தில், ஸ்டாலின் வகித்த பதவிதான். எனவே நேரடியாக அமைச்சராக்கிவிடலாம் என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் ஐடியா கொடுப்பதாகவும், கூறப்படுகிறது. ஆனால், அப்படி செய்தால் உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு மனம் வருத்தப்படுவார். ஆகவே மேயராக்குவது நல்ல சாய்சாக இருக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறார் என்கிறார்கள்.

இளைஞரணி செயலாளர்

இளைஞரணி செயலாளர்

இந்த வெற்றிக்கு பரிசாக 2019ம் ஆண்டு ஜூலை மாதம், திமுகவினர் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். இதன்பிறகு அவர் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். 2021 சட்டசபை தேர்தலில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காமல் மத்திய அரசு தாமதிக்கிறது என்பதை சுட்டிக் காட்ட, எய்ம்சில் அடிக்கல் நாட்டிய செங்கல் என்ற பெயரில் ஒரு செங்கலை ஏந்தியபடி போகுமிடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்தார் உதயநிதி. இந்த பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரு செங்கலை வைத்து திமுகவை ஆட்சியை பிடிக்க வைத்தார் உதயநிதி என அமைச்சர்கள் பலரும் சட்டசபையிலேயே புகழ்ந்து பேசியுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 முரசொலி

முரசொலி

கருணாநிதி தனது மூத்த பிள்ளை என்று அழைத்தது முரசொலி நாளிதழைத்தான். அந்த முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநராக பதவி வகித்து வருபவர்தான் உதயநிதி ஸ்டாலின். எனவே திரையுலகம், பத்திரிக்கையுலகம், சட்டசபை அனுபவம் என அனைத்து வகை அனுபவத்திற்கும் பரிசாக மேயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

உள்ளாட்சித் துறை அமைச்சர்

உள்ளாட்சித் துறை அமைச்சர்

தான் வந்த வழியிலேயே தனது மகனும் வருவதுதான் நல்லது.. அதுதான் அவருக்கு அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். ஆனால், உதயநிதி ஸ்டாலினை உள்ளாட்சித் துறை அமைச்சராக்கலாமே என்ற யோசனைகளும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படுகிறதாம். இதுவும் கருணாநிதி ஆட்சி காலத்தில், ஸ்டாலின் வகித்த பதவிதான். எனவே நேரடியாக அமைச்சராக்கிவிடலாம் என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் ஐடியா கொடுப்பதாகவும், கூறப்படுகிறது. ஆனால், அப்படி செய்தால் உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு மனம் வருத்தப்படுவார். ஆகவே மேயராக்குவது நல்ல சாய்சாக இருக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறார் என்கிறார்கள்.

முதல்வர் முடிவு

முதல்வர் முடிவு

1967ல் அரசியலுக்கு வந்த தான் 1996ல் மேயராகி பின்னர் அமைச்சரானதைப்போல், தன்னைப் போலவே மகன் உதயநிதியை முதலில் மேயராக்கி அதன் மூலம் அனுபவம் பெற வைக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியாக நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் அவரை அமைச்சராக்க வேண்டும் என்பதே நெருக்கமானவர்களின் விருப்பமாக உள்ளதால் முதல்வர் என்ன முடிவெடுப்பார் என்பது இனிதான் தெரியவரும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+