“நேற்று கட்சி ஆரம்பித்து இன்றே முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் வருகின்றனர்": உதயநிதி ஸ்டாலின் தாக்கு
சென்னை: நேற்று கட்சி தொடங்கி இன்று முதலமைச்சராக வேண்டும் என சிலர் நினைக்கின்றனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தவெக தலைவர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற கி.வீரமணி பிறந்தநாள் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கி.வீரமணிக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "1979 ஆம் ஆண்டு, அப்போது எனக்கு 2 வயது. கலைஞரின் கோபாலபுரம் வீட்டின் முன்பு கலைஞர், நம்முடைய முதல்வர், முதல்வரின் கையில் குழந்தையாக நான் என மூன்று பேரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினோம். இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் அது. கலைஞர் வழியில், தலைவர் வழியில் மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் என சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
பெரியாரின் கொள்கைப் பேரனாக இங்கே நான் வந்துள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திராவிடர் கழகத்தினர் இங்கே வந்துள்ளனர். உங்களை பார்க்கும் போது எனக்கு வியப்பாக உள்ளது. ஒரு சிலர் நேற்று கட்சி தொடங்கி இன்று முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் ஒரு கவுன்சிலர் பதவி கூட வேண்டாம். எங்களுக்கு கொள்கை, சமுதாய தொண்டு தான் முக்கியம் என இத்தனை ஆண்டுகள் பணியாற்றுகின்றனர்.
83 ஆண்டு கால பொதுவாழ்க்கை வாயிலாக திராவிட இயக்கத்தின் நேரடி வரலாற்று சாட்சியாக திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளார். இன்று பெரியார் கொள்கைகளை நாடு முழுவதும் பரவி உள்ளது, ஏன் உலகமே கொண்டாடி வருகிறது. இன்றைய தலைமுறையினர் பெரியாரை படிக்க ஆரம்பித்துள்ளனர், கொள்கைகளை ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர்." எனப் பேசியுள்ளார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications