அமித்ஷா அவர்களே.. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி.. ஒரே பதில் 'இந்தி தெரியாது போடா': உதயநிதி
இந்தி திணிப்பை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது
சென்னை: மீண்டும் இந்தியை இங்கே திணிக்க முயன்றால் டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்துவோம்... 2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம்.. இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல.. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி" என்று சென்னை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவானது ஒரு அறிக்கை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் மத்திய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

அமித்ஷா
மேலும், மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது... இதை கண்டித்துதான், திமுக இளைஞர் அணி தன்னுடைய போராட்டத்தை நேற்று முன்தினம் அறிவித்தது.. நேற்றைய தினம், அமைச்சர் பொன்முடியும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கூறியிருந்தார்.. அந்தவகையில், திமுக இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

ஹிந்தி மொழி
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமை ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.. இதுபோன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்... சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது..

கோஷமோ கோஷம்
உதயநிதி ஸ்டாலின் தலைமையில், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமான மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.. மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக சாடி, விமர்சித்து பேசினார்.

ஹிந்தி தெரியாது
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "இந்தி எந்த வடிவில் வந்தாலும், எங்களுடைய பதில் 'இந்தி தெரியாது போடா' என்பதுதான். இந்தி தெரியாது போடா என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம்... மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். 2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம்.. மத்திய, ஒன்றிய என்று சொன்னால்தானே அவர்களுக்கு கோபம் வரும்? அதனால் அப்படியே சொல்வோம்.. ஒன்றிய பிரதமர் மோடி அவர்களே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல, முன்புபோல இங்கு நடந்துகொண்டிருப்பது அதிமுக ஆட்சி இல்லை.

முத்துவேல் கருணாநிதி
இப்போது முதல்வராக இருப்பவர், எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ அல்ல. தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.. திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம். அது எங்கள் மாநில உரிமை.

கலைஞர்
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எங்கள் தலைவர் அதனை விட்டுக்கொடுக்கமாட்டார். காரணம் நாங்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்தவர்கள்.. இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக.. இப்போதைக்கு ஆளுங்கட்சியாக இருப்பதால், ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.. கூடினோம்.. கலைந்து சென்றோம் என்று கண்டிப்பாக இருக்கமாட்டோம்... நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழகத்திற்குள் கொண்டு வந்தாலும், நாங்கள் உங்களிடம் சொல்லப்போகிற ஒரே வார்த்தை " இந்தி தெரியாது போடா". அதை எப்போதுமே சொல்லிக் கொண்டேயிருப்போம்.

கருணாநிதி
3 மொழிப்போர்களை சந்தித்தது திமுக.அதில் இரண்டை நடத்தியது திமுகவின் மாணவர் அணிதான். தற்போது மாணவர் அணியுடன் இளைஞர் அணியும் சேர்ந்து இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறோம். இந்த இரு அணிகளும் இணைந்து கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த போராட்டத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.. முதல்கட்டப் போராட்டம் கலைஞர் அவர்கள் கட்டிக் கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியிருக்கிறோம்.

தயாநிதி மாறன்
நீங்கள் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், அடுத்தக்கட்ட போராட்டம் தமிழகத்தில் மட்டும் நடக்காது, தலைவரின் ஆணையைப் பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம். தமிழக மக்கள் என்னைக்குமே, உங்களுடைய இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். எப்படி 2019 தேர்தலில் பாசிச பாஜகவை எப்படி ஓடஓட விரட்டி அடித்தோமோ, அண்ணன் தயாநிதி மாறன் சொன்னதைப்போல், 2024 தேர்தல் பிரச்சாரத்துக்கு இது சிறந்த துவக்கமாக இது இருக்கும்... 2019 போலவே 2024 தேர்தலிலும் பாசிச பாஜகவை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள்.. 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது" என்றார் உதயநிதி.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications