Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”வெறும் செயல்பாபு அல்ல.. சூப்பர் செயல்பாபு” உதயநிதி ஸ்டாலின் பாராட்டால் அதிர்ந்த மேடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

சென்னையின் துறைமுகம் பகுதியில் திமுக சார்பாக உடன் பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் என்னும் தலைப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 165 தையல் இயந்திரம், 70 லேப்டாப், 550 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 9 ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெண்களுக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னைமேயர் பிரியா, சட்ட மன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட திமுகவினர் பலர் பங்கேற்றனர்.

சேகர்பாபு பேச்சு

சேகர்பாபு பேச்சு

அப்போது அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பெரும் இளைஞர் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. சேப்பாக்கம்-திருவில்லிக்கேணி தொகுதி மட்டும் அல்ல. 234 சட்டமன்ற தொகுதியும் உங்கள் தொகுதி தான். ஆகவே இன்னும் வேகமாக நீங்கள் பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

”சூப்பர் செயல்பாபு”

”சூப்பர் செயல்பாபு”

இதனைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அமைச்சர் சேகர்புவை முதல்வர் ஸ்டாலின் செயல்பாபு என்று பாராட்டுவார். ஆனால் நான் சொல்கிறேன், நீங்கள் வெறும் செயல்பாபு அல்ல, சூப்பர் செயல்பாபு என்று பாராட்டு தெரிவித்தார்.

 உதயநிதி ஸ்டாலின் பேச்சு

உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தொடர்ந்து, தனது தொகுதியில் உள்ள அத்தனை நிர்வாகிகளின் பெயர்களையும் எந்த நோட்டீஸையும் பார்க்காமல் பேசுவார். அந்த அளவிற்கு கழக தொண்டர்களுடன் நிர்வாகிகளுடன் நெருங்கி பழகக் கூடியவர். தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், திமுக இளைஞரணி சார்பாக சுமார் ரூ.50 லட்சம் வரை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி இருக்கிறார். இதனை அமைச்சர் சேகர்பாபுவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ரூ.75 லட்சம் ஆண்டுக்கு கொடுத்து வருவதாக கூறினார். முதலமைச்சர் ஸ்டாலினின் படையில் முதல் வரிசையில் நீங்கள் இருக்கிறீர்கள். நான் தான் கடைசி வரிசையில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+