தம்மாத்துண்டு தண்டு 'வாழைத்தண்டு'.. வயதானவர்கள் வாழைத்தண்டில் ஜூஸ் குடிக்கலாமா? வாழ வைத்திடும் வாழை
சென்னை: வாழைத்தண்டுகள் அனீமியாவை குணப்படுத்தக்கூடியவை.. காமாலையை விரட்டக்கூடியவை.. இந்த வாழை தண்டுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? வயதானவர்கள் சாப்பிடலாமா?
வாழைத்தண்டுகளில் பொட்டாசியம், வைட்டமின் B6 நிறைந்துள்ளது.. வாழைத்தண்டை காயவைத்து, தூள்செய்து தேன் கலந்து சாப்பிடுவதால், மஞ்சள் காமாலை தீரும்.. கல்லீரலும் வலுப்பெறும். வாழைத்தண்டில் வைட்டமின் A, C உள்ளதால், சருமத்துக்கு கவசம் போல பயன்படுகிறது.

வாழைத்தண்டுகள் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைந்துள்ளன.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வாழைத்தண்டு ஜூஸ் தினமும் குடிக்கலாம்.
இன்சுலின்: இன்சுலினை இந்த வாழைத்தண்டு மேம்படுத்த செய்கிறது.. ஆனால், வாழைத்தண்டு சாற்றினை வடிகட்டாமல் அப்படியே குடித்தால், நார்சத்து முழுமையாக கிடைக்கும்.. ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதும் தடுக்கப்படும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் அதற்கும் வாழைத்தண்டு சாறு போதுமானது.. ரத்தசோகை உள்ளவர்கள் இந்த வாழைத்தண்டு சாறு குடிக்கும்போது, இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. அதிக ரத்த அழுத்தத்தை கொண்டிருப்பவர்களும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.. அத்துடன், ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் மோசமான விளைவுகளை இந்த தண்டின் சாறு தடுத்து நிறுத்திவிடும்.
கொழுப்புகள்: கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற இந்த சாறு உதவுகிறது.. வாழைத்தண்டு ஜூஸுடன், சிறிது இஞ்சியையும் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றிலுள்ள கொழுப்பு குறைத்து செரிமானத்தை எளிதாக்கும். இதனால் உடல் எடை குறைய துவங்குகிறது.
வயிறு உபாதைகள், நெஞ்செரிச்சல், தொந்தரவுகள் இருந்தால், வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிக்கலாம். வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிடும்போது, குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சுக்கள் வெளியேறிவிடும். வயிற்றில் நீர்க்கட்டி இருந்தாலும், வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், விஷக்கடிகளால் ஏற்படும் வலிகள் போன்றவைகளை தீர்க்கவும் வாழைத்தண்டு மருந்தாகிறது.
சிறுநீரக கற்கள்: சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமானால், வாழைத்தண்டு போல சிறந்த மருந்து எதுவும் கிடையாது.. சிறுநீரகக் கோளாறுகளுக்கு பெரும்பாலும் இன்றுவரை பரிந்துரைக்கப்படுவது இந்த வாழைத்தண்டு ஜூஸ்தான்.. வெறும் வாழைத்தண்டு ஜுஸ் குடிக்க சிரமமாக இருந்தால், மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சை சாறு இவைளுடன் சேர்த்து குடிக்கலாம்.
வாழைத்தண்டில் பொட்டாசியமும், எலுமிச்சையில் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். இந்த தண்டில் உள்ள சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. சிறுநீரக கற்கள் விரைவில் கரைந்துவிடும்.. வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், சிறுநீரக கற்களை சேரவிடாமல் தடுத்துவிடும்.
நோய்த்தொற்று: சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதை குணப்படுத்த இந்த தண்டின் சாறு உதவுகிறது. வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும். வாழை தண்டு ஜூஸுடன் சிறிது எலுமிச்சம் பழ சாறையும் கலந்து குடித்தால், சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதை தடுக்கப்படும்.
வாழைத்தண்டு, இந்த தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் , குறைவாக சேர்த்து கொள்ளலாம். மற்றபடி வாழைத்தண்டு யாரையும் வாழவே வைக்கும்..!!
வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை 2 வேளையும் 100 மி.லி. குடித்துவந்தால் கல்லடைப்பும் நீங்கும். நீர் எரிச்சல், சிறுநீரில் ரத்தம் கலந்து போவதுபோல இருந்தால், முள்ளங்கி + தண்டு சாறு குடித்து வந்தாலே போதும்.. அதேபோல, சிறுநீரக்கற்கள் இருந்தால், வாழைத்தண்டு சாறு ஒருநாளும், பார்லி கஞ்சி இன்னொரு நாளும் சாப்பிட்டு வந்தாலே சிறுநீர்க்கற்கள் வெளியேறும்.












Click it and Unblock the Notifications