5 பிள்ளைகளின் தாய்.. 26 வயது காதலனுடன் ஓட்டம்.. "ப்ளூ டிரம்முக்குள் சாக விரும்பல..ங்க" என்ற கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனக்கு பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைபட்டு சாக விருப்பமில்லை, நிம்மதியாக வாழ ஆசை இருக்கிறது" என்று சொல்லி, 21 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவியை அவரது காதலனுக்கே கணவர் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார் கணவர்.. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில், கணவர் எடுத்த இந்த முடிவு, நாடு முழுவதும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் சந்த் கபீர் நகர் மாவட்டம், டேவரி கிராமத்தை சேர்ந்தவர் புத்தி ராம் நிஷாத்... இவருக்கு 45 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஃபுல்மதி.. 37 வயதாகிறது.. இவர்கள் 2 பேருக்கும் 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது... இது ஒரு காதல் திருமணமாகும். இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இதில் மூத்த மகனுக்கு 18 வயதாகிறது..

கள்ளக்காதலில் மனைவி

21 வருடங்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக சென்றது இவர்களின் வாழ்க்கை.. ஆனால், கடந்த சில மாதங்களாகத்தான், ஃபுல்மதியின் புத்தி பேதலிக்க துவங்கியிருக்கிறது.. அதே பகுதியை சேர்ந்த 26 வயதான அவதேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அதுவே நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியிருக்கிறது..

இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்துவிட்டது.. மனம் நொந்து போனார்.. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டைகளும், மனக்கசப்புகளும் வந்தன.. கணவரின் அட்வைஸால் எரிச்சலடைந்த ஃபுல்மதி, தனது 5 குழந்தைகளையும் கணவரையும் தவிக்கவிட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலன் அவதேஷுடன் வீட்டை விட்டு ஓடிப்போனார்.

5 பிள்ளைகளை விட்டு ஓடிய தாய்

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் ஊர் பெரியவர்களும் சேர்ந்து, 2 பேரிடமும் பேசி சமாதானப்படுத்தி ஃபுல்மதியை மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும் வீடு திரும்பிய பிறகும் ஃபுல்மதியின் மனம் மாறவில்லை.,.. கணவருடன் வாழ கொஞ்சமும் இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டார்.. இதனால் மறுபடியும் தம்பதிக்குள் வாக்குவாதங்களும் சண்டைகளும் வெடித்தன.

தினந்தோறும் இப்படி சண்டையும், தகராறும் வருவதையும், அதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் மன உளைச்சல் ஏற்படுவதையும் புத்தி ராம் நிஷாத் விரும்பவில்லை.. மனைவியை வற்புறுத்தி தன்னோடு வைத்திருப்பதை விட, அவர் விரும்பிய நபருடனேயே வாழ அனுமதிப்பதே நல்லது என்ற முடிவுக்கும் வந்தார்... அதன்படி காதலன் அவதேஷை வரவழைத்து, கிராமத்தினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் சொன்னார்..

மனைவிக்கு திருமணம் செய்த கணவர்

அத்துடன், அஷ்ரஃபூர் கிராமத்திலுள்ள சிவபெருமான் கோயிலில் வைத்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் ஃபுல்மதிக்கும் அவரது காதலன் அவதேஷுக்கும் புத்தி ராம் நிஷாத் முன்னின்று திருமணத்தையும் நடத்தி வைத்தார். திருமணம் முடிந்ததும் இருவரையும் மனதார வாழ்த்தி, "பிடாய்" சடங்கு முறைப்படி வழியனுப்பியும் வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கணவர் புத்தி ராம், "எனக்கு பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைபட்டு சாக விருப்பமில்லை, எனக்கு நிம்மதியாக வாழ ஆசை இருக்கிறது. 21 வருடங்களுக்கு முன்பு நானும் காதலித்துத்தான் திருமணம் செய்தேன். ஆனால், அவளுக்கு எங்களது பாசத்தைவிட காதலன் மீதுதான் நாட்டம் அதிகமாக இருந்தது. என் மனைவியின் மகிழ்ச்சியில்தான் என் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது. தினமும் சண்டையிட்டு வாழ்வதை விட, அவர் விரும்பியவருடன் வாழ வழிசெய்வதே சிறந்தது" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

Husband Lets Wife Marry Her Lover

கணவன்மார்கள் முடிவு

இது குறித்து தகவலறிந்த போலீசார்,இது தொடர்பாக எந்தப் பக்கத்திலிருந்தும் புகார்கள் வரவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்தின் பேரிலேயே இந்நிகழ்வு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மனைவியின் கள்ளக்காதலை ஏற்று, அவரைக் காதலனுக்கே கணவர் தாரை வார்த்துக் கொடுத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், டிரம்முக்குள் அடைபட்டு சாக விருப்பமில்லை என்று ஏன் சொன்னார் தெரியுமா? கடந்த வருடம் முஸ்கான் என்பவர் தன்னுடைய கணவரை கொடூரமாக கொன்றது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

ப்ளூ டிரம் சம்பவம் நினைவிருக்கா?

அதாவது, வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவர் ராஜ்புத்துக்கு கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால், மனைவி முஸ்கானும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து அவருக்குச் சாப்பாட்டில் தூக்க மாத்திரை கொடுத்து, கத்தியால் இதயத்தில் குத்தியும் தொண்டையை அறுத்தும் கொடூரமாகக் கொன்றனர். பின்னர் உடலை 15 துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்த ப்ளூ டிரம்மில் போட்டு சிமெண்ட் கலவையை ஊற்றி மூடி மறைக்க முயன்றபோது காவல்துறையினரிடம் வசமாகச் சிக்கினர்.

Husband Lets Wife Marry Her Lover

இந்த அதிர்ச்சிச் சம்பவத்திற்குப் பிறகே, தங்களுக்கு மனைவியால் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்றும், தினமும் குடும்பச் சண்டையில் நிம்மதியிழந்து டிரம்முக்குள் அடைபட்டுச் சாவதை விட மனைவியை அவரது கள்ளக்காதலனுடனேயே சேர்த்து வைப்பதே சிறந்தது என்றும் கணவன்மார்கள் யோசித்து மனைவிகளை தாரை வார்த்துத் தரும் வினோத பழக்கம் அரங்கேறத் தொடங்கியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+