ஸ்டாலினுக்கு வடதமிழ்நாட்டில் புதிய அரசியல் கணக்கு.. யோசிக்க வைக்கும் ராமதாஸ்–திருமாவளவன் நிலைப்பாடு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய நகர்வுகள் பரபரப்பு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசியல் மேடையில் ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது: "திமுக கூட்டணிக்குள் பாமக வர வாய்ப்பு இருக்கிறதா?".. இதற்கு விடை அவ்வளவு எளிதில் கிடையாது என்றாலும், சாத்தியக்கூறு உள்ளதா என்பதை தற்போது ஆராய வேண்டியுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் நிலவும் ஆழமான சமூக மற்றும் அரசியல் மோதல்களின் வெளிப்பாடாக பாமக-விசிக விவகாரங்களை பார்க்க வேண்டும்..

நோ சொன்ன அன்புமணி?
பாமக தரப்பை பொறுத்தவரை, அன்புமணி தலைமையிலான அணி அதிமுகவோடு இருக்கும் சூழலில், ராமதாஸ் தரப்பு தங்களை ஒரு பலமான சக்தியாகக் காட்ட, திமுக கூட்டணியையே பாதுகாப்பான புகலிடமாக பார்க்கிறது.. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இதற்கான சமிக்ஞைகள் ராமதாஸ் வெளிப்படுத்தினார்.. திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று அப்போவே டாக்டர் ராமதாஸ் சொன்னார்.. ஆனால் அன்புமணிதான் பிடிவாதத்துடன், திமுக கூட்டணிக்கு "நோ" என்றாராம்..
சரி, இந்த முறையாவது திமுக கூட்டணியில் சேர்ந்துவிடலாம் என்று ராமதாஸ் தரப்பு முயற்சித்துள்ளபோதுதான், பெரும் தடையாக இருக்கிறது திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி..
பாமக - விசிக அரசியல் போர்
விசிக மற்றும் பாமகவுக்கிடையிலான பிரச்சனை என்பது, வெறும் தொகுதி பங்கீடு தொடர்பானது கிடையாது.. சீட் விவகாரமோ, அதிகார பிரச்சனையோ கிடையாது.. அது தலித் மற்றும் வன்னியர் சமூகங்களுக்கு இடையே கடந்த பல வருடங்களாக நிலவி வரும் சமூக முரண்பாடுகளின் அரசியல் நீட்சி..
குறிப்பாக, பாமக முன்வைத்த "நாடகக் காதல்" தொடர்பான விமர்சனங்கள் மற்றும் சமூக பிளவுகளை தூண்டும் பேச்சுகள் விசிகவினரை ஆழமாக காயப்படுத்தியது.. அதனால் திருமாவளவன் "வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுடன் ஒரே மேடையில் அமர மாட்டோம்" என்ற நிலையை தெளிவாக வைத்துள்ளார்..
திருமாவளவன் செக்
"பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியேறுவோம்" என்று நேற்றுகூட திருமாவளவன் சொல்லியிருப்பது திமுக தலைமைக்கு நேரடி சவாலாக இருக்கிறது..
காங்கிரஸ் போன்ற கட்சிகள் மோதலை தீர்க்க முயன்றாலும், களத்தில் உள்ள தொண்டர்களின் மனநிலை எளிதில் மாறுமா என்பது சந்தேகம்தான்.. வட மாவட்டங்களின் கிராமப்புறங்களில் பாமக மற்றும் விசிக தொண்டர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகவே பார்க்கும் பழக்கமுள்ளதால் மோதல் இன்னமும் நீடிக்கிறது..
இரு கட்சிகளும் இணையுமா?
தலைவர்கள் கை குலுக்கி கொண்டாலும், ஒரு தரப்பின் வாக்கு மற்றொருவரிடம் முழுமையாக மாறுமா என்பது அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்படுகின்றனர்..
கூட்டணி வைத்தாலும், பல இடங்களில் பாமக தொண்டர்கள் விசிகவின் சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள்.. அதேபோல், விசிக தொண்டர்கள் பாமகவை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.. தொண்டர்கள் மனநிலையும், பழைய சமூக முரண்பாடுகளும் பெரும் தடையாக இருக்கின்றன..
தலைவர்கள் நிலை மாற்றி கூட்டணி அமைக்க முயன்றாலும், களத்தில் இருக்கும் வாக்கு பழக்கம் எளிதில் மாறாது.. அவை சமூக நல்லிணக்கம் மற்றும் தொண்டர்களின் மனநிலை மாறுதல் ஆகியவற்றின் மீது சார்ந்திருக்கும்.. இதனால், கூட்டணியின் பலன் அல்லது எதிர்மறை விளைவுகள் இன்னும் குழப்பமாக இருக்க வாய்ப்பு அதிகம்..
எனவேதான், கூட்டணியில் இவர்கள் இணைந்தாலும், திமுகக்கு பலனை தருமா அல்லது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா என்ற தயக்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தெரிகிறது..
விசிக பாமக இணைந்தால்?
ஒருவேளை அரசியல் தேவைகளுக்காக இவர்கள் இணைந்தால், வட தமிழகத்தில் பெரிய தேர்தல் மாற்றம் உருவாகலாம்.. 2 கட்சிகளின் வாக்கு வங்கிகள் ஒன்றிணைந்தால், அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் அந்த கூட்டணியை அசைக்க முடியாது.. ஆனால், இந்த இணைப்பால் விசிக போன்ற நம்பிக்கையான கூட்டணி கட்சியை திமுக இழக்க நேரிடும்..
திருமாவளவன் இப்போதைக்கு திமுகவின் கொள்கை ரீதியான நண்பராக இருக்கிறார்.. பாமகவை உள்ளே இழுப்பதன் மூலம் அந்த பெயரை கெடுக்க திமுக விரும்பாது என தெரிகிறது..
எனவே, பாமக-விசிக இடையிலான சமூகப் பகை தேர்தல் களத்தில் ஒரு பெரிய தடையாகவே உள்ளது.. இதனை தலைவர்கள் சந்திப்பதாலே சரிசெய்ய முடியாது,... அது தொண்டர்களின் மனமாற்றத்திலும், சமூக நல்லிணக்கத்திலும் அடங்க வேண்டும்.. எனவே, பாமக திமுக கூட்டணிக்குள் வருவது எட்டாக்கனவாகவே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications