சூப்பர் நிர்வாகம்...முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
சென்னை: மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனையை பாராட்டி பேசியதாக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது.
மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இது தவிர தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,15 மாநிலங்களின் வேளாண்துறை அமைச்சர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்
இந்த கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:- மத்திய அமைச்சர் உடனான கூட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்வது, விவசாயிகளின் விவரங்களை கணினிமயப்படுத்துவது, கிசான் திட்டத்தில் பயன்பெற வழிவகைகளை எளிமை படுத்துவது, வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவது, எண்ணெய் பனை உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஸ்டாலினின் சாதனை
தமிழகத்தில் வேளாண்மை துறை நன்றாக செயல்படுவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராட்டினார். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனையை பாராட்டினார்..தமிழக அரசு சார்பில் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தினோம்.

வேளாண் சட்டம்
குறுவை சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. அரசு சார்பில் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேவையை பூர்த்திசெய்ய மத்திய அரசை கனிமொழி எம்.பி மூலம் வலியுறுத்தினோம். அதேபோல இந்த கூட்டத்திலும் வலியுறுத்தினோம். மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படவில்லை. ஆனாலும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தொடர் பாராட்டு
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்கட்சியான அதிமுகவும், பாஜகவும் ஸ்டாலினை சில திட்டங்களுக்கு பாராட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications